You are here

விளையாட்டு

‘வெற்றி பெறவேண்டும் என்ற வெறி இல்லை’

சௌத்ஹேம்டன்: அவமானகரமான தோல்வியைத் தவிர்த்தாலும் மான் செஸ்டர் யுனைடெட் வீரர்களிடம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆவேசம் இல்லை என்று கூறியுள் ளார் அதன் நிர்வாகி மொரின்யோ. முதலில் கோட்டைவிட்டு விட்டு பின்னர் ஆட்ட நேரம் முழுவதும் அதைச் சரிக்கட்டுவதையே மான் செஸ்டர் யுனைடெட் வீரர்கள் இப் பருவத்தில் வழக்கமாக கொண் டுள்ளார்கள். இது நேற்று அதிகாலை நடந்த சௌத்ஹேம்டன் குழுவிற்கு எதி ரான பிரிமியர் லீக் ஆட்டத்திலும் தொடர்ந்தது. முதல் 20 நிமிடத்தில் 2 கோல் கள் போட்டு முன்னிலை கண்டது சௌத் ஹேம்டன். ஆம்ஸ்ட்ராங், செட்ரிக் சோர்ஸ் இருவரும் போட்ட அந்த கோல் களால் ஆட்டம் சௌத்ஹேம்ட னின் கட்டுக்குள் சென்றது.

‘ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்தியாவிற்கு நல்ல வாய்ப்பு’

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை வீழ்த்த இந்தியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக ஆஸ்தி ரேலிய முன்னாள் அணித் தலை வர் ஸ்டீவ் வாக் கூறியுள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி வரு கிற 6ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லாத நிலையில், இந்த டெஸ்ட் தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித் தலைவர் ஸ்டீவ் வாக் இணையத் தளத்துக்கு அளித்த பேட்டியில், “ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய அணி தன்னை நல்ல முறையில் தயார்ப்படுத்தியுள்ளது.

போர்ன்மத்திற்கு எதிராக போராடி வென்ற மான்செஸ்டர் சிட்டி

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தின் மற்றோர் ஆட்டத் தில் போர்ன்மத்திற்கு எதிராக விளையாடிய மான்செஸ்டர் சிட்டி வெற்றிக்காக போராட வேண்டி இருந்தது. பெர்னார்டோ சில்வா போட்ட கோலால் 16வது நிமிடத்திலேயே முன்னிலை பெற்றது சிட்டி. அதையடுத்து லிரோய் சானே உதைத்த பந்தை போர்ன்மத் கோல் காப்பாளர் அஸ்மிர் பெகோவிச் தடுத்த நிலையில், தொடங்கியது சிட்டியின் போராட்டம். டாவிட் சில்வா களமிறக்கப்படாத தும் காயம் காரணமாக செர்ஜியோ அகுவேரோ வெளியேறியதும் சிட் டிக்குச் சவாலாக இருந்தது.

இந்தியா-பெல்ஜியம் மோதல்

புவனேஷ்வர்: உலகக் கிண்ண ஹாக்கிப் போட்டி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஷ் வரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் விளையாடும் மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பெல்ஜியம், கனடா, தென்னாப் பிரிக்கா ஆகிய அணிகள் அந்தப் பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 5=0 எனும் கோல் கணக்கில் பந்தாடியது. இரண்டாவது ஆட்டத்தில் பெல் ஜியம் அணியை இன்று அது சந்திக்கிறது. இந்திய அணி பெல்ஜியத்தை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்புடன் இருக் கிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா சமநிலை

சிட்னி: இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக் கெட் அணிகள் மோதும் நான்கு நாள் பயிற்சி ஆட்டம் சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல்நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது நாளில் இந்திய அணி பந்தடித்தது. இந்தியா 358 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிரித்விஷா (66 ஓட்டங்கள்), அணித் தலைவர் விராத் கோஹ்லி (64 ஓட்டங்கள்), ரகானே (56 ஓட்டங்கள்), புஜாரா (54 ஓட்டங்கள்), விஹாரி (53 ஓட்டங்கள்) ஆகிய 5 வீரர்கள் அரை சதம் அடித்தனர். ஆரோன் ஹார்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆப்பிரிக்கக் கிண்ணப் போட்டி: உரிமையை இழந்த கெமரூன்

அக்ரா: 2019ஆம் ஆண்டின் ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையிலான காற்பந்துப் போட்டியை கெமரூன் ஏற்று நடத்துவதாக இருந்தது. இந்நிலையில், கெமரூனுக்கு வழங் கப்பட்ட அந்த உரிமை பறிக்கப் பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அந்தப் போட்டிக்குத் தேவையான ஏற்பாடுகளை கெமரூன் இன்னும் நிறைவேற்றவில்லை என்று ஆப்பிரிக்கக் காற்பந்துச் சம்மேளனம் குறை கூறியுள்ளது. இதன் காரணமாகப் போட்டியை ஏற்று நடத்தும் வாய்ப்பை கெமரூன் இழந்துள்ளது. “போட்டியை ஏற்று நடத்தும் உரிமையை கெமரூனிடமிருந்து பறிக்க நாங்கள் முடிவு எடுத்துள்ளோம்,” என்று சம்மேளனத்தின் தலைவர் திரு அகமது அகமது செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

எதிரணியினரை ஓரங்கட்டிய ஆர்சனல், செல்சி

நேற்று அதிகாலை நடைபெற்ற ஐரோப்பிய லீக் காற்பந்துப் போட்டி களில் லண்டன் அணிகளான ஆர்சனல், செல்சி இரண்டும் அதிக கோல் எண்ணிக்கையில் எதிர்த்து விளையாடிய அணி களை ஓரங்கட்டின. உனய் எமிரே நிர்வகித்து வரும் ஆர் சனல் குழு உக்ரேனிய அணி யான வோர்ஸ்க்லா போல்டாவா குழுவை 3=0 என்ற கோல் எண் ணிக்கையில் துவம்சம் செய்தது. பாதுகாப்பு காரணங்களுக் காக கியவ் நகருக்கு மாற்றப்பட்ட இந்தப் போட்டியின் முடிவால் ‘இ’ பிரிவில் ஆர்சனல் முதல் நிலையில உள்ளது. ஆர்சனலின் முதல் கோலை ஸ்மித் ரோவ் என்ற இளையர் ஆட்டத்தின் 10ஆம் நிமிடத்தில் போட்டார்.

கவாஸ்கர்: மிதாலியை நீக்கியது தவறுதான்

புதுடெல்லி: வெஸ்ட் இண்டீசில் நடந்த பெண்கள் 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக் கெட் போட்டியில் இந்தியா அரைஇறுதியில் படு தோல்வி அடைந்தது. பயிற்சி யாளர் ரமேஷ் பவார் வேண்டு மென்றே தன்னை நீக்கிய தா கவும் பலமுறை அவர் அவ மதித்த தாக வும் 35 வயதான மிதாலி ராஜ் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் அளித்த ரமேஷ் பவார், மிதாலியை நீக்கியது அணியின் நலன் கருதி எடுக் கப்பட்ட முடிவு என்று கூறினார்.

தென்னாப்பிரிக்காவைப் பந்தாடிய இந்திய அணி

புவனேஸ்வர்: 14வது உலகக் கிண்ண ஆண்கள் ஹாக்கி போட்டி இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ் வரத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவும் தென் னாப்பிரிக்காவும் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் கோல் போடும் வேட்கையுடன் ஆடினர். ஆட்டத்தின் 10வது நிமிடத் தில் மந்தீப் சிங் முதல் கோல் அடித்து அணியின் கோல் மழையைத் தொடங்கிவைத்தார். அவரைத் தொடர்ந்து, அக் ஷ்தீப் சிங் 12வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார்.

நேப்போலிக்கு எதிரான வாழ்வா சாவா நிலை

பாரிஸ்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் குழுவிடம் 2=1 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் தோல்வியைத் தழுவி உள்ளது. லிவர்பூலுக்கு எதிராக ஜுவான் பேனார்ட்டும் நெய்மாரும் கோல்களைப் போட்டனர். இதன் விளைவாக சாம்பியன்ஸ் லீக் போட்டியின் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்குத் தகுதி பெற அடுத்த மாதம் இத்தாலியின் நேப்போலியுடனான ஆட்டத்தில் லிவர்பூல் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அடுத்த மாதம் 11ஆம் தேதியன்று லிவர்பூலின் ஆன் ஃபீல்ட் விளையாட்டரங்கத்தில் இந்த முக்கியமான ஆட்டம் நடைபெறுகிறது.

Pages