You are here

விளையாட்டு

ஆசிய கிண்ணம்: கோஹ்லிக்கு ஓய்வு

புதுடெல்லி: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இம்மாதம் 15=28 தேதிகளில் நடக்கவிருக்கும் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணித் தலைவரான விராத் கோஹ்லிக்கு இத்தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா அணித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். புதுமுக வீரராக ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது இடம்பெற்றுள்ளார். மொத்தம் ஆறு அணிகள் இரு பிரிவுகளாக இத்தொடரில் மோதுகின்றன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தானுடன் தகுதிச் சுற்றில் வெல்லும் அணி இடம்பெறும்.

தோல்வியின் பிடியிலிருந்து மீள முயலும் மேன்யூ

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவத்தில் 1987 ஆம் ஆண்டிற்குப் பின் ஆக மோச மான தொடக்கத்தைத் தவிர்க்க முனைகிறது மான்செஸ்டர் யுனை டெட் குழு. நடப்பு பருவத்தில் இதுவரை மூன்று ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ள அக்குழு மூன்று புள்ளிகளுடன் பட்டியலில் 13வது இடத்திலுள்ளது. பட்டியலில் 18வது இடத்தில் உள்ள பர்ன்லி குழுவுடன் இன்று இரவு பொருதவுள்ள யுனைடெட், ஆட்டத்தை வென்றே தீரவேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. கடந்த வாரம் தனது சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு விடம் 3=0 எனும் கோல் கணக்கில் யுனைடெட் மோசமாகத் தோற்றது.

2032 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்த இந்தோனீசியா விருப்பம்

ஜகார்த்தா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக ஏற்று நடத்திய உற்சாகத்தில் அடுத்த தாக 2032ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்த இந்தோ னீசியா விருப்பம் தெரிவித்து உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்தும் உரிமையைப் பெறுவதற் கான போட்டியில் இந்தோனீசியா பங்கேற்கும் என்று அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் தலைவர் தாமஸ் பேக், ஆசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைவர் ஷேக் அகமது அல் ஃபகத் அல் சாபா ஆகியோரைக் கலந்தாலோசித்த பின்னர் திரு விடோடோ தமது விருப்பத்தை வெளியிட்டார்.

ஒரே பிரிவில் மேன்யூ, யுவென்டஸ்

சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரின் குழு நிலை போட்டி களை முடிவு செய்யும் குலுக்கல் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இப்பருவத்திற்கான சாம்பி யன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதி பெற்ற 32 குழுக்களும் எட்டு பிரி வுகளாகப் பிரிக்கப்பட்டன. இதில் இங்கிலிஷ் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனை டெட்டும் ஸ்பானிய காற்பந்துக் குழுவான யுவென்டசும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. இக்குழுக்கள் இடம்பெற்றுள்ள ‘ஹெச்’ பிரிவில் வெலன்சியா, யங் பாய்ஸ் குழுக்களும் உள்ளன.

காயம் காரணமாக இந்தியக் குத்துச்சண்டை வீரர் விலகல்

ஜகார்த்தா: இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஷ் கிருஷ்ணா (படம்) காயம் காரணமாக ஆசிய விளை யாட்டு போட்டியில் இருந்து வில கினார். 75 கிலோ எடைப்பிரிவில் சிறப் பாக செயல்பட்டு வந்த அவர், நேற்று மாலை அரையிறுதி போட்டி யில் கஜகஸ்தான் வீரர் அமான்குல் அபில்கானுடன் மோதுவதாக இருந்தது. ஆனால், கண்ணில் ஏற்பட்ட காயம் தீவிரம் அடைந்த தால் அவர் உடற்தகுதிப் பெற வில்லை. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விகாஷ் கிருஷ்ணனுக்கு கண் ணில் காயம் ஏற்பட்டது. காலிறு தியில் சீன வீரருடன் மோதியபோது காயம் மேலும் தீவிரமடைந்தது. எனினும், கடுமையாக போராடி அந்தப் போட்டியில் வெற்றி பெற்றார்.

6,000 ஓட்டங்கள்: கோஹ்லி சாதனை

சௌத்ஹேம்டன்: இங்கிலாந்து, இந்தியா 4வது டெஸ்ட் கிரிக் கெட் போட்டியில் நேற்று இந்தி யாவின் விராத் கோஹ்லி ஆறு ஓட்டங்கள் எடுத்தபோது டெஸ்ட் போட்டியில் அதிவேக 6,000 ஓட்டங்களை எட்டிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். டெஸ்ட் போட்டியின் 119 இன் னிங்சில் அவர் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் 117 இன்னிங்சில் 6,000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்து முதல் இடத்தில் உள்ளார். அதுபோல் இந்திய வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகள் எடுத்த 3வது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

ஆண்களுக்கான 4x100 மீ. அஞ்சல் ஓட்டத்தில் இந்தோனீசியா வெள்ளி

ஜகார்த்தா: ஆண்களுக்கான 4x100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் போட்டியை ஏற்று நடத்தும் இந்தோனீசியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற இந்தப் பந்தயத்தை வென்ற ஜப்பான் தங்கத்தைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் ஜப்பான் பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்றுள்ளது. மின்னல் வேகத்தில் ஓடிய இந்தோனீசிய வீரர்கள் வெள்ளியை வென்றதும் அரங்கில் கூடியிருந்த இந்தோனீசிய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கினர்.

சீன வீரரைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தில் பந்தயத்தை முடித்த இந்தோனீசிய வீரர் (வலது). படம்: ஏஎஃப்பி

காற்பந்து இறுதி ஆட்டத்தில் மோதும் ஜப்பான், தென்கொரியா

ஜகார்த்தா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்களுக்கான காற்பந்துப் போட்டியில் ஜப்பானும் தென்கொரியாவும் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளன. அரையிறுதி ஆட்டத்தில் தென்கொரியாவும் வியட்னாமும் மோதின. இதில் பலம் பொருந்திய தென்கொரியக் குழு 3=1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நடப்பு வெற்றியாளரான தென்கொரியாவின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் வியட்னாம் தவித்தது. தென்கொரியாவின் லீ சுக் வூ போட்ட இரண்டு கோல்கள் அக்குழுவின் வெற்றிக்கு வித்திட்டது. மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் ஐக்கிய அரபு சிற்றரசுகளை 1-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது ஜப்பான்.

தடையுடைத்து தங்கம் வென்ற சுவப்னா

ஜகார்த்தா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய திடல்தட வீரங்கனை சுவப்னா பர்மனின் முனைப்புமிக்க செயல்பாடு அனை வரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. பெண்களுக்கான ஹெப்டத் தலோன் போட்டியில் சுவப்னா தங்கம் வென்றார். உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டப் பந்தயம், 200 மீட்டர் ஓட்டப் பந்தயம், 800 மீட்டர் ஓட்டப் பந்தயம் ஆகியவற்றைக் கொண்ட ஹெப்டத்தலோன் போட்டியில் பங்கேற்ற மற்ற போட்டியாளர் களைவிட அதிகப் புள்ளிகள் பெற்று சுவப்னா வாகை சூடினார்.

மலேசியாவிடம் வீழ்ந்த இந்திய அணி போட்டியின் ஆண்களுக்கான

ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. நேற்று இரவு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அது மலேசியாவைச் சந்தித்தது. இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் இந்தியாவின் ஹமன்பிரீத் சிங் கோல் போட்டு தமது குழுவை முன்னிலைக்குக் கொண்டு சென்றார். ஆனால் ஏழு நிமிடங்கள் கழித்து மலேசியா ஆட்டத்தைச் சமன் செய்தது. இருப்பினும், மலேசியாவின் கொண்டாட்டம் தணிவதற்குள் அடுத்த ஒரு நிமிடத்தில் இந்தியா அதன் இரண்டாவது கோலைப் போட்டது. ஆனால் தனது சாதக நிலையைத் தற்காக்க இந்தியா மீண்டும் தவறியது.

Pages