மலர்மாரி பொழிந்து தியாகத்திற்கு நன்றி

கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அயராது பாடுபட்டு வரும் சுகாதார, தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முதல்நிலை ஊழியர்களுக்கு இந்தியாவின் முப்படைகளும் நேற்று நன்றி தெரிவித்து, அவர்களைக் கௌரவப்படுத்தின. போர் விமானங்கள் அணிவகுப்பு, கடற்படைக் கப்பல்களில் விளக்கேற்றம், ஹெலிகாப்டர்களைக் கொண்டு மருத்துவமனைகள் மீது மலர்மாரி பொழிதல் எனப் பல வழிகளில் 'கொரோனா போர் வீரர்'களுக்கு நன்றி செலுத்தப்பட்டது. சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனை, ஓமந்தூரார் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனை, ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்டவை மீது போர் விமானங்கள் மூலம் மலர்தூவியும் 'பேண்டு' வாத்தியங்களை இசைத்தும் முப்படைகளும் மரியாதை செலுத்தின. (படத்தில்) ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு மருத்துவமனை மீதும் அதன் ஊழியர்கள் மீதும் பூமழை தூவி வாழ்த்தும் இந்தியக் கடற்படையின் 'சேட்டக்' ஹெலிகாப்டர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!