முதியோர் இல்லங்களில் கொவிட்-19 பரிசோதனைக்கு முன்னுரிமை

கொவிட்-19 நோய்த்தொற்றுப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு முதியோர் இல்லவாசிகளுக்கும் அங்கு பணிபுரிவோருக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

நோய்ப் பரவலைக் குறைப்பதற்காக, முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களைக் கவனித்துக்கொள்ளும் பணியாளர்கள், தாங்கள் பணிபுரியும் இல்லங்களிலேயே சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட வசதிகளில் அல்லது ஹோட்டல்களில் தங்குவதற்கு அரசாங்கம் துணைபுரியும் என்று சுகாதார அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் நேற்று முன்தினம் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய மூத்தோரைப் பாதுகாப்பதற்காக முதியோர் இல்லங்கள் அனைத்திலும் செயல்படுத்தப்பட உள்ள நடவடிக்கைகளில் இவை அடங்கும். தாதிமை இல்லங்கள், நல்வாழ்வு இல்லங்கள், அடைக்கலம் வழங்கும் இல்லங்கள், உடற்குறையுள்ள பெரியவர்களுக்கான இல்லங்கள் ஆகியவற்றுக்கு இந்நடவடிக்கைகள் பொருந்தும்.

தாம்சன் ரோட்டிலுள்ள 'லீ ஆ மோய்' முதியோர் இல்லம், அட்மிரல்டியிலுள்ள ஆதரவற்றோருக்கான 'அக்காசியா' இல்லம் உள்ளிட்ட ஆறு தாதிமை இல்லங்கள் கொரோனா கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளன.

முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு சுகாதார அமைச்சு ஏப்ரல் 29ஆம் தேதி முதல் கிருமித்தொற்றுப் பரிசோதனைகளை நடத்தி வருகிறது.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இந்தச் சோதனைகளை ஏப்ரல் 30ஆம் தேதி முதல் தொடங்கி அவற்றை நேற்று முன்தினம் முடிக்கவிருந்தது.

இந்தப் பரிசோதனைகளுக்கும் அவற்றுக்குப் பிந்தைய சிகிச்சைகளுக்கும் அமைச்சுகள் முழு நிதி ஆதரவு வழங்குகின்றன.

முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களைக் கவனித்துக்கொள்ளும் பணியாளர்களுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டு அவர்களது வீட்டில் உள்ளவர்களுக்கும் இந்நோயைப் பரப்பும் வாய்ப்பைக் குறைக்க, அவர்கள் தங்குவதற்குப் பாதுகாப்பான சூழலை உறுதிசெய்வது போன்ற நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தாதிமை இல்ல ஊழியர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள தங்குமிடங்களில் அவர்களைத் தங்கவைக்க அமைச்சுகள் இல்லங்களுடன் சேர்ந்து பணியாற்றும்.

அத்துடன், அந்த ஊழியர்களுக்கு உணவு, போக்குவரத்து வசதி, அன்றாட அத்தியாவசிய பொருட்களை வாங்குவது ஆகியவற்றுக்கு அமைச்சுகள் நிதி வழங்கும்.

பாதுகாப்பு இடைவெளியை மேம்படுத்த இல்லங்களில் தங்குமிட வசதியை விரிவுபடுத்தவும் சுகாதார அமைச்சு ஆதரவு அளிக்கும். பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு $500 படித்தொகை வழங்கப்படும்.

இந்த நடவடிக்கையால் பணியாளர்கள் அசௌகரியத்திற்கு உள்ளாவது புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று என்று கூறிய அவ்விரு அமைச்சுகள், முதியோரைப் பாதுகாப்புடன் வைத்திருக்க தாதிமை இல்ல பணியாளர்கள் செய்துவரும் முயற்சிகளும் தியாகங்களும் பாராட்டுக்குரியவை என்று புகழாரம் சூட்டின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!