தேக்கா சந்தை: இணையத்தில் இறைச்சி, காய்கறி விற்பனை

தேக்கா சந்தையில் செயல்படும் ஏழு கடைகள், நாளை (மே 5) முதன்முறையாக ஃபேஸ்புக்கில் நேரலையாக கறி, காய்கறிகளை விற்பனை செய்யவுள்ளன.

தாங்கள் வாங்க விரும்பும் பொருட்கள் குறித்த மேல் விவரங்களைக் கடைக்காரர்களிடம் வாடிக்கையாளர்கள் கேட்டறிய முடியும்.

தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையமும் BlkJ எனும் அமைப்பு ஒன்றும் சேர்ந்து இந்தத் திட்டத்திற்கு ஏற்பாடு செய்து உள்ளன.

கொவிட்-19 நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் நடப்பில் உள்ள தற்போதைய சூழலில், வாடிக்கையாளர்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் தேக்கா சந்தையில் இறைச்சி, காய்கறி வாங்க இந்த ஏற்பாடு வகைசெய்யும்.

'தேக்கா இணையச் சந்தை' என்று அழைக்கப்படும் இந்த ஏற்பாட்டிற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, தேக்கா சந்தையில் இயங்கும் கூடுதலான கடைக்காரர்கள் இந்தத் தளத்தில் சேர்க்கப்படுவர். மற்ற ஈரச் சந்தை களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படக்கூடும் என்று தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் கூறியது.

மக்களின் அன்றாடத் தேவைகளை ஈரச் சந்தைகள் பூர்த்தி செய்கின்றன என்று ஆணையத்தின் உதவித் தலைமை நிர்வாகி ஜேன் லிம் கூறினர்.

"முன்னெப்போதையும்விட, தற்போதைய சூழலில் பாதுகாப்பான, புதிய வழிகள் மூலம் நமது அன்றாட தேவைகளை நிறைவேற்ற மின்னிலக்கத் தளங்கள் வழிவகுக்கின்றன.

"அதன் ஒரு பகுதியாக, கூடுதலான வாடிக்கையாளர்களைச் சென்றடைய அத்தியாவசிய பொருட்களை இணையத்தில் விற்பனை செய்வது எப்படி என்பதை ஈரச் சந்தை கடைக்காரர்களுக்குக் கற்றுக்கொடுப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி," என்று அவர் சொன்னார்.

ஃபேஸ்புக்கில் நேரலையாக நாளை (மே 5) நண்பகலில் விற்பனை தொடங்கும். முதலில் வருபவர்களுக்கு முதற்சலுகை என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படும். பொருட்களுக்கு 'பே நவ்' தளம் மூலம் கட்டணம் செலுத்தலாம். $20க்கும் அதிகமாக இறைச்சி, மீன், காய்கறி வாங்குபவர்களுக்கு அவை இலவசமாக அதே நாளில் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படும்.

தேக்கா சந்தையில் இறைச்சிக் கடை நடத்திவரும் முகம்மது முஸ்தஃபா ஷாஹுல் ஹமீது, 62, நாளைய இணைய விற்பனையில் பங்கேற்கும் ஏழு கடைக்காரர்களில் ஒருவர்.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் கடந்த மாதத் தொடக்கத்தில் நடப்புக்கு வந்ததைத் தொடர்ந்து, வியாபாரம் 40 விழுக்காடு வரை சரிந்ததாகச் சொன்னார்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இறைச்சிக் கடை நடத்தி வரும் திரு முஸ்தஃபா, தொடக்கத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது சிரமமாக இருந்ததை ஒப்புக்கொண்டார். எனினும், இப்போது அதைப் பயன்படுத்துவது தமக்குப் பரிச்சயமாகி விட்டதாகச் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!