போலிசை தகாத சொற்களால் திட்டியவருக்கு ஏழு மாதம் சிறை

போலிஸ் அதிகாரி ஒருவரைத் தகாத சொற்களால் திட்டியதற்காகவும் பாதுகாப்பான இடைவெளி விதிமுறையை அமல்படுத்திய அரசாங்க ஊழியர்கள் இருவரை வசைபாடியதற்காகவும் ரவி சின்னதம்பி சுப்பிரமணியம், 53, என்ற சிங்கப்பூர் ஆடவருக்கு ஏழு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தன் மீதான இரு துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளையும் தாக்கி காயப்படுத்தி விடுவதாக மிரட்டிய குற்றச்சாட்டையும் ரவி கடந்த மாதம் ஒப்புக்கொண்டார்.

முகக்கவசத்தை முறையாக அணியத் தவறியது உட்பட மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் அவருக்குத் தண்டனை விதிக்கப்படுமுன் கவனத்தில் கொள்ளப்பட்டன.

போதைப் புழக்கம், வழிப்பறி போன்ற குற்றங்களுக்காக ரவி சிறைக்குச் செல்வதும் வெளியே வருவதுமாக இருந்தார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் சிறையில் இருந்து விடுதலையான ரவி, கடந்த மாதம் 14ஆம் தேதி இரவு 7 மணியளவில் புளோக் 74, வாம்போ டிரைவுக்கு அருகே இருக்கும் தன் நண்பரைக் காண்பதற்காக வீட்டைவிட்டுக் கிளம்பினார். சிறிது நேரத்திற்குப் பின் மதுபோதையில் அவர் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளத் தொடங்கினார்.

இதுகுறித்து போலிசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட, சற்று நேரத்தில் போலிஸ் சார்ஜண்ட் இருவர் அங்கு வந்துசேர்ந்தனர்.

அப்போது, அங்குள்ள ஒரு கடையின் 'பியர்' கலனைக் கையில் ஏந்தியபடி ரவி வரிசையில் நின்றிருந்ததையும் வரிசை ஏன் முறையாக ஒழுங்குபடுத்தப்படவில்லை என்று கத்திக்கொண்டிருந்ததையும் போலிஸ் அதிகாரிகள் கண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த இரு அதிகாரிகளும் ரவியை அணுகியபோது அவர் மூர்க்கமடைந்து கத்தியதாகவும் அவர்களுக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும் கூறப்பட்டது.

பின்னர் சார்ஜண்ட் குவோவை நோக்கி ரவி தகாத சொற்களால் பழித்ததாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டார்.

ஆனாலும், நான்கு நாட்களுக்குப் பிறகு புளோக் 81, வாம்போ டிரைவில் மீண்டும் அவர் குற்றம் இழைத்தார். அவர் முகக்கவசத்தை தாடைப் பகுதியில் அணிந்தபடி இருந்ததை பாதுகாப்பு இடைவெளி அமலாக்க அதிகாரிகள் இருவர் கண்டனர். இதையடுத்து, மூக்கையும் வாயையும் மூடியிருக்குமாறு முகக்கவசத்தை அணியும்படி அவர்கள் ரவியிடம் கூறினர். ஆனாலும், ரவி ஆத்திரமடைந்து, அவர்கள் இருவரையும் இழிவாகப் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!