மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களை புரட்டிப் போட்ட கனமழை; 72 பேர் பலி அலற வைத்த ‘அம்பன்’

கோல்கத்தா: வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் நேற்று முன்தினம் இரவு மேற்கு வங்க மாநிலத்துக்கும் வங்க தேசத்துக்கும் இடையே கரையைக் கடந்தது. இந்தப் புயலின் கோரப் பிடியில் சிக்கி மேற்கு வங்கத்தில் 72 பேர் பலியாகி உள்ளனர்.

'சூப்பர் புயல்' என்று வர்ணிக்கப்பட்ட இப்புயல் கரையைக் கடக்கும் போது பலத்த சேதங்களை ஏற்படுத்தி உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அவர் 2.5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்திலும் வங்க தேசத்திலும் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல மணிநேரம் நீடித்த இடைவிடாத பலத்த கனமழை காரணமாக பல இடங்களை வெள்ளம் சூழ்ந்தது.

மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் 72 பேர் உயிரிழந்த நிலையில், ஹவுரா, கோல்கத்தா, மேற்கு மிட்னாபூர் உள்ளிட்ட பகுதிகளை அம்பன் புயல் புரட்டிப் போட்டுள்ளது.

இப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்ப சில நாட்கள் ஆகலாம் என்றும் புயல் சேத மதிப்புகளைக் கணக்கிட நான்கு நாட்கள் ஆகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா கிருமி தாக்­கத்தை விட அம்­பன் புய­லால் ஏற்­பட்­டுள்ள சேதங்­கள் அதி­கம் என முதல்­வர் மம்தா பானர்ஜி தெரி­வித்­துள்­ளார்.

அம்­பன் புயல் ஒடி­சா­வி­லும் தன் கோர சுவ­டு­க­ளைப் பதித்­துச் சென்­றுள்­ளது. அங்கு சுமார் ஒன்­றரை லட்­சத்­துக்­கும் அதி­க­மா­னோர் வசிப்­பி­டங்­களில் இருந்து பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

ஒடி­சா­வில் புரி, கட்­டாக், ஜாஜ்­பூர், கேந்­தி­ர­பாரா, கஞ்­சம், பாலா­சூர், குர்தா மாவட்­டங்­களில் மழை வெளுத்து வாங்­கி­ய­தால் எங்­கும் வெள்­ளக்­கா­டாக காட்சி அளித்­தது. ஒடி­சா­வில் புய­லுக்கு இரு­வர் பலி­யாகி உள்­ள­னர்.

இதே போல் மேற்கு வங்­கத்­தில் ஐந்து லட்­சம் பேர் முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் புயல் கரை­யைக் கடக்க ஐந்து மணி­நே­ரம் ஆனது. அப்­போது 155 கிலோ­மீட்­டர் வேகத்­தில் வீசிய பலத்த காற்­றின் கார­ண­மாக ஏரா­ள­மான மரங்­க­ளு­டன் மின்­கம்­பங்­களும் சாய்ந்­தன.

அம்­பன் புயல் கார­ண­மாக அசாம், மேகா­லயா மாநி­லங்­க­ளி­லும் பலத்த மழை பெய்­ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!