தென்கொரியாவில் மீண்டும் சமூக இடைவெளி நடைமுறைகள்

சோல்: தென்கொரியாவில் நேற்று முன்தினம் 63 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

கிருமித்தொற்றுச் சம்பவங்களில் பெரும்பாலானவை தலைநகர் சோலுக்கு வெளியே கண்டறியப்பட்டன.

இரண்டாவது கிருமித்தொற்று அலை எழுமோ என்ற அச்சத்தில், கிருமி பரவும் நகர்களில் சமூக இடைவெளி நடைமுறைகள் மீண்டும் நடப்புக்கு வரும் எனக் கூறப்படுகிறது.