வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் சகோதரர்கள்

துலியும் நெவாரியும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) உள்ள அல் புஸ்தான் விலங்கியல் மையத்திலிருந்து சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்திற்கு வந்திருக்கும் புது விருந்தினர்கள்.

விருந்தினர்கள் என்றால் அவர்கள் சில நாட்கள் இருந்துவிட்டுச் சென்று விடுவார்கள். ஆனால் இந்த சகோதரர்கள் சிங்கப்பூரிலேயே நிரந்தரமாக இருக்கப் போகிறார்கள்.

இவர்கள் வேறு யாருமல்ல. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட காண்டாமிருகங்கள்தான்.

இவை சென்ற ஆண்டு 2020 அக்டோபர் தொடக்கத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வெற்றிகரமாக விமானம் மூலம் சிங்கப்பூருக்கு வந்தன.

இவை பாதுகாப்பாக பயணம் செய்ய பல மாதங்களாகத் திட்டமிடப்பட்டு இவற்றுக்கு ஏற்ற கூண்டுகள் தயார் செய்யப்பட்டு அவற்றின் மூலம் இங்கு வந்துள்ளன.

எட்டு மணி நேர விமானப் பயணத்தின்போது வழியில் இவைகளுக்கு விருப்பமான உணவும் தண்ணீரும் கொடுக்கப்பட்டன. இவை அவற்றை உண்டு அமைதியாக தங்களுடைய பயணத்தைத் தொடர்ந்தன.

இவை நைட் சபாரிக்கு 2 நவம்பர் 2020 அன்று வந்து சேர்ந்தன. பின்னர் இவை சில காலம் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு தற்பொழுது பார்வையாளர்களைச் சந்திக்க தயாராகிவிட்டன. இந்த காண்டாமிருகங்கள் அதிகாரபூர்வமாக ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த சகோதரர்களில் 1,900 கிலோ எடையுடன் இருக்கும் 7 வயது துலி தைரியமானது. மேலும் உணவு உண்ணுவதில் ஆர்வம் கொண்டது.

ஆனால் 4 வயதாகும் நெவாரி சிறிது எச்சரிக்கையுடன் கூச்ச சுபாவமும் உடையது.

கிட்டத்தட்ட நான்கரை ஒலிம்பிக் நீச்சல் குளம் அளவிற்கு இவை வசிப்பதற்கு நைட் சஃபாரியில் இடம் தயார் செய்யப்பட்டது. அங்கு இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும் ஆளுயரத்திற்கு புற்களும் வளர்க்கப்பட்டுள்ளன. காண்டாமிருகங்களுக்கு சேறும் தண்ணீரும் விருப்பம் என்பதால் நடுவில் சிறு குளமும் வெட்டப்பட்டுள்ளது.

கோமதி, மேரி ஆகியோரின் பராமரிப்பில் இந்த சகோதரர்கள் இனி பராமரிக்கப்படுவார்கள்.

வனவிலங்கு காப்பகத்தின் துணைத் தலைவர் சரவணன் இளங்கோவன் கூறுகையில், "பத்து ஆண்டுகளுக்கு முன் நாங்கள் இந்திய பெண் காண்டாமிருகம் ஒன்றைப் பெற்றோம். தற்பொழுது மீண்டும் இரண்டு இந்திய ஆண் காண்டாமிருகங்களைப் பெற்றிருக்கிறோம். இவற்றின்மூலம் துலியையும் நெவாரியையும் பராமரிக்கும் பராமரிப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சியை அளிப்பதுடன் விலங்குகளைப் பற்றிய பல அனுபவங்களும் கிடைக்கும்," என்றார்.

நாம் ட்ராம் வண்டியில் அமர்ந்தபடி இந்த இரண்டு காண்டாமிருகங்களின் நடவடிக்கைகளைக் காணலாம்.

மேல் படம்: இந்திய பூர்வீக மரங்களும் ஆளுயர புற்களும் காணப்படும் நைட் சஃபாரியில் தன்னுடைய புது இடத்தில் சேற்றைத் தன்னுடைய உடல் முழுவதும் பூசிக்கொண்டு ஆர்வத்துடன் சுற்றி வருகிறது ஏழு வயதாகும் துலி என்று பெயரிடப்பட்டுள்ள ஆண் காண்டாமிருகம்.

கீழ்ப்படம்: நான்கு வயதாகும் நெவாரி புது இடத்தில் இருக்கும் பெரிய குளத்தில் குளித்து மகிழ்கிறது. இவை உடல் சூட்டைக் குறைக்க எப்போதும் உடலின் மேல் சேற்றைப் பூசிக்கொள்ளும் அல்லது தண்ணீரில் இருக்கும் என்பதால் இவற்றின் புது இருப்பிடத்தில் ஒரு பெரிய குளமும் சேறும் சகதியும் நிறைந்த குளமும் வெட்டப்பட்டு உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!