ஜெய் அமர்சிங்: இது கல்லூரி குறித்து பேசும் படம்

‘கபாலி’, ‘பரி­யே­றும் பெரு­மாள்’, ‘கஜி­னி­காந்த்’, ‘டானாக்­கா­ரன்’ உள்­ளிட்ட பல படங்­களில் குணச்­சித்திர வேடங்­களில் நடித்து வந்த நடி­கர் லிங்­கேஷ் கதா­நா­ய­க­னாக நடிக்­கும் படம் ‘காலேஜ் ரோடு’.

கல்வி நிலை­யங்­களில் உள்ள மிக முக்­கிய பிரச்­சி­னையைப் பற்றி பேசும் பட­மாக இது இருக்­கும் என்­கி­றார் இயக்­கு­நர் ஜெய் அம­ர்­சிங்.

“இளை­யர்­க­ளின் வாழ்­வில் கல்வி எந்த அள­வுக்கு அவ­சி­யம் என்பதை அனை­வ­ரும் உணர வேண்டும். எனி­னும் அந்­தக் கல்­வி­யின் நிலை இன்று என்­ன­வாக இருக்­கிறது, அது அனை­வ­ருக்­கு­மா­ன­ படமாக உள்­ளதா, எதிர்­கால சந்ததி­யி­ன­ருக்கு கல்வி என்­ன­வாக இருக்­கப் போகிறது என்­ப­தைப் பற்றி விரி­வாக அல­சி­யுள்­ளோம்.

“பர­ப­ரப்­பான திருப்­பங்­க­ளோடு காதல், நட்பு, நகைச்­சுவை உள்ளிட்ட வணிக அம்­சங்­களும் நிறைந்த பட­மா­க­வும் இருக்­கும். கல்­லூரி மாண­வர்­களை மன­தில் வைத்து இந்­தப் படத்தை எடுத்­துள்­ளோம்,” என்­கி­றார் ஜெய் அமர்­சிங்.

படம் விரை­வில் வெளி­யாக உள்ள நிலை­யில், மிகத் தர­மான படைப்­பாக உரு­வாகி உள்­ளது என தனது பாராட்­டு­களைத் தெரி­வித்­துள்­ளார் இயக்­கு­நர் பா.ரஞ்­சித். இதுவே தங்­க­ளுக்­கு கிடைத்­துள்ள முதல் வெற்றி என இப்­ப­டக்­கு­ழுவி­னர் உற்­சா­கத்­து­டன் கூறு­கின்­ற­னர்.

இதே­போல் படத்­தின் சிறப்­புக் காட்­சி­யைப் பார்த்த கல்­லூரி மாண­வர்­களும் பெரி­தும் பாராட்­டி­யுள்­ள­னர். அப்ரோ இசை­ய­மைத்­துள்ள இப்­ப­டத்­தில் மோனிகா நாய­கி­யாக நடித்­துள்­ளார்.

எதிர்வரும் டிசம்­பர் 30ஆம் தேதி படம் வெளி­யா­கிறது. ஆனந்த்­நாகு, அன்­சர், அக்­சய்­க­மல், ‘நாடோ­டி­கள்’ பரணி, ‘மெட்­ராஸ்’ வினோத் ஆகியோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­தி­ருக்­கி­றார்­கள்.

, :

  

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!