‘இப்போது புரிதல் உள்ளது’

“நகைச்­சுவை கதா­பாத்­தி­ரங்­களில் நடிப்­பது அவ்­வ­ளவு எளி­தல்ல என்று பல­ரும் கூற கேட்­டி­ருக்­கி­றேன். ஆனால் முதன்­மு­றை­யாக அப்­ப­டிப்­பட்ட கதா­பாத்தி­ரத்­தில் நடித்­த­போது பல­வற்­றைக் கற்றுக்கொண்­டேன்,” என்­கி­றார் இளம் நாயகி ஐஸ்­வர்யா லட்­சுமி.

அண்­மை­யில் வெளி­யீடு கண்­ட ‘கட்டா குஸ்தி’ படம் தனக்கு பாராட்­டு­க­ளைப் பெற்றுத் தந்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், அண்மைய பேட்டி ஒன்­றில் இந்­தப் படத்­தில் நடித்­த­போது கிடைத்த அனு­ப­வங்­கள், பாலியல் சீண்­டல்­கள், சமூ­கப் பொறுப்பு எனப் பல்­வேறு விஷ­யங்­கள் குறித்து மனம்­தி­றந்து பேசி உள்ளார்.

பாலி­யல் தொல்­லை­கள் இல்­லாத துறை­களே இல்லை என்­றா­கி­விட்­டது என்­றும் இதன் கார­ண­மாக பாலி­யல் சீண்­டல்­கள் குறித்து சிறார்­க­ளுக்­குப் புரியவைக்க வேண்டிய அவ­சி­யம் எழுந்­துள்­ளது என்றும் கூறு­கி­றார் ஐஸ்வர்யா லட்­சுமி.

“கட்டா குஸ்தி’ என்ற தலைப்பை முத­லில் கேட்­ட­போது, அதற்­கான அர்த்­தம் தெரி­யா­மல் விழித்­தேன். பிறகு இயக்­கு­நர் அது­கு­றித்து விளக்­கம் அளித்­தார். அப்­போது­தான் எல்­லாம் புரிந்­தது.

“கண­வன், மனை­விக்கு இடையே ஏற்­ப­டக்­கூ­டிய பிரச்சி­னை­களை அல­சும் கதை­யில் மலை­யா­ளப் பெண்­ணாக நடித்­தி­ருக்­கி­றேன். மேலும் குஸ்தி (மல்­யுத்­தம்) கலை­யில் தேர்ச்சி பெற்ற இளம் பெண்­ணாக நடித்­தது உற்­சா­கம் அளித்­தது. இதற்­காக சிறப்­புப் பயிற்சி­யும் பெற்­றேன்.

“எனது பங்­க­ளிப்பை விமர்­ச­கர்­கள் பாராட்டி உள்­ள­னர். படம் குறித்­தும் நேர்­ம­றை­யான விமர்­ச­னங்­கள் வந்­துள்­ள­தால் உற்­சா­க­மாக உணர்­கி­றேன்,” என்று சொல்­லும் ஐஸ்­வர்யா, தற்­போது துல்­கர் சல்­மா­னு­டன் ‘கிங் ஆஃப் கோதா’, மம்­முட்­டி­யுடன் ‘கிறிஸ்­டோ­ஃபர்’ ஆகிய படங்­களில் நடித்­து வருகிறார். தமி­ழி­லும் இரண்டு புதுப் படங்­களில் ஒப்­பந்தமாகியுள்ளார்.

சிறு வய­தில் இருந்தே மம்­மூட்­டியை மிகவும் பிடிக்­கு­மாம். அவ­ரு­டன் இணைந்து நடிக்க வேண்­டும் என்­பது தமது நீண்­ட­நாள் கனவு என்­றும் அது இப்­போது நிறை­வேறி இருப்­ப­தில் மகிழ்ச்சி என்­றும் கூறு­கி­றார்.

“அண்­மைக்­கா­ல­மாக தென்­னிந்­திய திரை­யு­ல­கில் அடி­தடி, திகில் படங்­க­ளின் எண்­ணிக்­கை­தான் அதி­க­மாக உள்­ளது. நகைச்­சு­வைக்கு கூடு­த­லாக இடம்கொடுக்­கும் படங்­கள் வெளி­யா­வது குறைந்­து­விட்­டது. இத­னால் ஏற்­பட்டுள்ள இடை­வெ­ளியை நிரப்­பும் வகை­யில் ‘கட்டா குஸ்தி’ படம் வெளி­யாகி உள்­ளது.

“முன்­பெல்­லாம் நகைச்­சுவை கதா­பாத்­தி­ரங்­கள் அமைந்­தால் சிறப்­பாக நடிக்கமுடி­யும் என்­றும் மற்­ற­வர்­க­ளை­விட என்­னால் நல்ல பெயர் வாங்க முடி­யும் என்­றும் நினைத்­துக்கொள்­வேன். ஆனால் எனக்கான வாய்ப்பு அமைந்­த­போது பட­ப­டப்­பாக உணர்ந்­தேன். ஒவ்­வொரு காட்­சி­யி­லும் ரசி­கர்­களை சிரிக்க வைப்பது சாதா­ர­ண­மான பணி­யல்ல,” என்­கி­றார் ஐஸ்­வர்யா.

கடந்த 2017ஆம் ஆண்டு மலை­யா­ளத்­தில் அறி­மு­க­மான இவர், ‘மாயா­நதி’ படம் மூலம் மலை­யா­ளம் தாண்டி, பிற மொழி சினிமா ரசி­கர்­க­ளை­யும் ஈர்த்­தார். தொடர்ந்து தமி­ழில் தனு­ஷூ­டன் ‘ஜெகமே தந்­தி­ரம்’ மூலம் அறி­மு­க­மா­ன­வர், ‘புத்­தம்­புது காலை’, ‘கார்கி’, ‘கேப்­டன்’ உள்­ளிட்ட படங்­களில் நடித்து முடித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், மணிரத்னத்தின் ‘பொன்­னி­யின் செல்­வன்’ படம் தனக்கு நல்ல திருப்­பு­மு­னை­யாக அமைந்­துள்­ளது என்­றும் அதில் தாம் ஏற்று நடித்த பூங்­கு­ழலி கதா­பாத்­தி­ரம் தம்மை கடைக்­கோடி ரசி­கர்­க­ளி­டம் கொண்டு சேர்த்­துள்­ள­தா­க­வும் ஐஸ்­வர்யா சொல்­கி­றார்.

பாலி­யல் தொல்­லை­கள் குறித்து பெண்­கள் வெளிப்­படையா­கப் பேசி, விவா­திக்க வேண்­டும் என்று குறிப்­பிடும் இந்த இளம் நாயகி, சமு­தா­யத்­தின் ஒவ்வொரு தளத்­தி­லும் உள்­ள­வர்­கள், இவ்­வி­ஷ­யத்­தில் பெண்­களை ஆத­ரிக்க வேண்­டும் என்­கி­றார்.

“தவ­றான தொடு­தல் குறித்து சிறார்­கள் மத்­தி­யில் விழிப்பு­ணர்வு தேவை. பல ஆண்டு­க­ளுக்கு முன்பு தவ­றாக நடந்­து­கொள்ள முயன்ற ஒருவரை பளார் என்று அறைந்­தேன். ஆனால் அண்­மை­யில் யாரை­யும் அவ்­வாறு அடிக்க வேண்­டிய நிர்­பந்­தம் எழ­வில்லை.

“எல்லா பெண்­க­ளுக்­கும் இந்த மோச­மான தொடு­தல் அனு­ப­வம் நிச்­ச­யம் இருக்­கும். சிறு­மி­யாக இருந்­த­போது குரு­வா­யூர் கோவி­லுக்­குச் சென்­ற­போது இந்த அனு­ப­வம் ஏற்­பட்­டது. பிறகு கோயம்­புத்­தூ­ரில் அதே­போன்ற சம்­ப­வம் நிகழ்ந்­தது. இப்­போது விவ­ரம் தெரிந்த பெண்­ணாக இருப்பதால் இந்­தப் பிரச்­சி­னையை எப்­படி அணுக வேண்­டும் என்ற புரி­தல் உள்­ளது,” என்­கி­றார் ஐஸ்­வர்யா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!