சீனாவில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்வு

தேசிய அளவில் கொவிட்-19 கட்­டுப்­பாடு­க­ளைத் தளர்த்­து­வ­தாக சீனா அறி­வித்­துள்­ளது.

கொவிட்-19 தொற்றை அறவே ஒழிக்­கும் கொள்­கை­யு­டன் சீனா செயல்­பட்டு வரு­கிறது. அத­னைச் சாதிக்­கும் நோக்­கில், ஒரு நக­ரில் ஒரு சில­ரைக் கொவிட்-19 தொற்­றி­னா­லும் நக­ரத்தை முழு­மை­யாக முடக்­கும் வகை­யில் சீனா கட்­டுப்­பா­டு­களை அறி­வித்து வந்­தது.

இதற்கு மக்­க­ளி­டையே கடும் எதிர்ப்பு எழுந்­தது. அதி­பர் ஸி ஜின்­பிங் தலை­மை­யி­லான அர­சிற்கு எதி­ராக மக்­கள் போராட்­டத்­தி­ல் இறங்­கினர், சீனா­வில் அரிய நிகழ்­வா­கப் பார்க்­கப்­பட்­டது.

புதிய தளர்­வு­க­ளின்­படி, இலே­சான அறி­கு­றி­க­ளு­டன் அல்­லது அறி­கு­றி­க­ளின்றி கிருமி தொற்­றி­யோர் இனி வீட்­டி­லேயே தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்டு, குண­ம­டை­ய­லாம். உள்­நாட்­டிற்­குள் பய­ணம் செய்­வோர் இனி பரி­சோதனை செய்­து­கொள்­ளத் தேவை­ இல்லை.

பொது இடங்­க­ளுக்­குச் செல்லும்­முன் மக்­கள் இனி தங்­க­ளது கைப்­பே­சி­களில் ‘பசுமை நலக் குறி­யீட்­டைக்’ காண்­பிக்­கத் தேவை­யில்லை.

சீன அர­சின் இந்த அறி­விப்பை அந்­நாட்டு மக்­கள் பெரி­தும் வர­வேற்­றுள்­ள­னர்.

“இயல்பு வாழ்க்­கைக்­குத் திரும்பு­வ­தற்­கான நேர­மிது,” என்று ‘வெய்போ’ சமூக ஊட­கப் பய­னா­ளர் ஒரு­வர் தெரி­வித்­துள்­ளார்.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்வு, நாட்­டின் பொரு­ளி­ய­லை­யும் நாணய மதிப்­பை­யும் உயர்த்­தும் என்­றும் கருதப்படுகிறது.

இந்­தக் கொள்கை மாற்­றத்­தின் மூலம் சீனா முன்­னோக்கி மிகப் பெரிய அடியை எடுத்து வைத்­துள்­ளது எனக் குறிப்­பிட்ட ஸிவை ஸாங் எனும் பொரு­ளி­யல் வல்­லு­நர், “2023ஆம் ஆண்­டின் நடுப்­ப­கு­திக்­குள் சீனா தனது எல்­லை­களை முழு­மை­யா­கத் திறக்­கும் என எதிர்­பார்க்­கி­றேன்,” என்­றும் சொன்­னார்.

கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­டு­வதை அடுத்து, பய­ணம் செய்­வதற்கு மக்­கள் ஆயத்­த­மா­கத் தொடங்­கி­விட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!