அமைச்சராக உதயநிதி; அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகலாம்

திமுக இளை­ஞ­ர­ணிச் செய­லா­ள­ரும் தமி­ழக முதல்­வர் மு.க. ஸ்டாலினின் மக­னு­மான திரு உத­ய­நிதிக்கு (படம்) விரை­வில் அமைச்­சர் பதவி வழங்­கப்­ப­ட­லாம் என இந்­திய ஊட­கங்­களில் செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.

தமி­ழக அமைச்­ச­ர­வை­யில் விரை­வில் மாற்­றம் செய்­யப்­ப­ட­லாம் என்று தக­வல்­கள் வெளி­யாகி வந்த நிலை­யில், அடுத்த வாரமே அது இடம்­பெ­ற­லாம் என்று தக­வல் அறிந்த வட்­டா­ரங்­க­ளைச் சுட்டி, என்­டி­டிவி செய்தி தெரி­வித்து இருக்­கிறது.

சேப்­பாக்­கம்-திரு­வல்­லிக்­கேணி தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக உள்ள திரு உத­ய­நி­திக்கு ஊரக மேம்­பாட்டு, சிறப்­புத் திட்­டங்­கள் துறை அல்லது இளைஞர் நலத்துறை ஒதுக்­கப்­ப­ட­லாம் என்­றும் பேச்சு அடிபடுகிரது.

திமு­க­வின் ‘உத­ய­சூ­ரி­யன்’ என அக்­கட்­சி­யின் தொண்­டர்­க­ளால் அழைக்­கப்­படும் 46 வய­தான திரு உத­ய­நிதி, முன்­னாள் முதல்­வர் கரு­ணா­நிதி குடும்­பத்­தி­லி­ருந்து உரு­வெ­டுத்­துள்ள மூன்­றாம் தலை­மு­றைத் தலை­வர்.

கிட்­டத்­தட்ட 30 ஆண்­டு­க­ளாக திமுக இளை­ஞ­ர­ணிச் செய­லா­ள­ராக திரு ஸ்டா­லின் பதவி வகித்த நிலை­யில், கடந்த 2019ஆம் ஆண்டு அப்­பொ­றுப்பு திரு உத­ய­நிதி வசம் சென்­றது.

இந்­நி­லை­யில், அண்­மை­யில் நடந்த திமுக உட்­கட்­சித் தேர்­த­லி­லும் அப்­ப­த­வி­யை திரு உத­ய­நிதி தக்­க­வைத்­துக்­கொண்­டார்.

திரு கரு­ணா­நி­தி­யின் மறைவை அடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு திமுக தலை­வ­ரா­கப் பொறுப்­பேற்­றார் திரு ஸ்டா­லின்.

அதன்­பின்­னர் 2021ஆம் ஆண்டு நடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் திமுக வெற்­றி­பெற, தமி­ழக முதல்­வ­ராக அவர் அரி­யணை ஏறி­னார்.

பல திரைப்படங்களில் கதா நாயகனாக நடித்திருக்கும் திரு உதயநிதி, 2021 சட்டமன்றத் தேர்தலின்போது திமுகவின் முக்கியப் பரப்புரையாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

திரு உத­ய­நி­திக்கு அமைச்­சர் பதவி வழங்க கடந்த சில மாதங்­க­ளா­கவே திமுக தலைமை திட்­ட­மிட்டு வரு­வ­தா­க­வும் அவர் கைவ­ச­முள்ள திரைப்­ப­டங்­களில் நடித்து முடிப்­ப­தற்­கா­கக் காத்­திருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

கடந்த மாதம் திரு உத­ய­நி­தி­யின் பிறந்­த­நா­ளைத் திமு­க­வி­னர் மிகப் பெரிய அள­வில் கொண்­டா­டி­னர். அமைச்­சர்­களும் கட்­சி­யின் உயர்­மட்­டத் தலை­வர்­களும் நேரில் சென்று இவ­ருக்கு வாழ்த்து தெரி­வித்­த­னர்.

இது, கட்­சி­யி­லும் அர­சாங்­கத்­தி­லும் இவ­ருக்கு இருக்­கும் செல்­வாக்­கினை உணர்த்­து­வ­தாக அமைந்­தது.

அமைச்­ச­ரா­கப் பத­வி­யேற்­பது உறுதி என்­ப­தும் அதற்­கான அதி­கா­ர­பூர்­வ­மற்ற கொண்­டாட்­டமே அது என்­றும் கட்சி வட்­டா­ரங்­களில் பேசப்­பட்­டது.

அப்­போது, அமைச்­சர்­கள் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி இரு­வ­ரும் திரு உத­ய­நி­திக்­குச் சாத­க­மா­கக் கருத்­து­ரைத்­த­னர்.

குடும்ப அர­சி­யல் குறித்து திரு உத­ய­நி­தி­யி­டம் முன்­னர் கேட்­ட­போது, “அது­பற்றி எனது தொகுதி மக்­கள் முடி­வு­செய்­யட்­டும். எனது பிறப்­புச் சான்­றி­த­ழைப் பார்க்­கா­தீர்­கள், என்­னு­டைய செயல்­பா­டு­களைப் பார்த்து மதிப்­பி­டுங்­கள் என்று அவர்­க­ளி­டம் கூறி வரு­கி­றேன்,” என்று பதி­ல­ளித்­தி­ருந்­தார்.

இத­னி­டையே, ஐ.பெரி­ய­சாமி, அர.சக்­க­ர­பாணி, சாத்­தூர் ராமச்­சந்­தி­ரன், மூர்த்தி, சி.வி.கணே­சன் உள்­ளிட்ட சில அமைச்­சர்­க­ளின் துறை­களில் மாற்­றம் இருக்­க­லாம் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!