இந்தியாவை அதிரவைத்த இணையவழி பாலியல் மோசடி; இதுவரை 14,190 பேர் மீட்பு, 18 பேர் கைது

இணை­ய­வழி மோச­டிப் பேர்­வ­ழி­கள் விரித்த வலை­யில் சிக்கி கடந்த மூன்­றாண்­டு­க­ளா­கப் பாலி­யல் தொழி­லில் தள்­ளப்­பட்டு வந்த 14,190 பேரை மீட்­டுள்­ள­தாக இந்­தி­யா­வின் சைப­ரா­பாத் (ஹைத­ரா­பாத் தொழில்­நுட்ப நக­ரம்) காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

இதன் தொடர்­பில் இது­வரை 18 பேர் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

பல்­வேறு இந்­திய மாநி­லங்­கள் மட்­டு­மன்றி, பங்­ளா­தேஷ், நேப்­பா­ளம், தாய்­லாந்து, உஸ்­பெ­கிஸ்­தான், ரஷ்யா போன்ற வெளி­நா­டு­க­ளைச் சேர்ந்­த­வர்­களும் அக்­கும்­ப­லி­டம் சிக்கி பாதிக்­கப்­பட்­ட­னர்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் கிட்­டத்­தட்ட பாதிப்­பேர் மேற்கு வங்க மாநிலத்­தைச் சேர்ந்­த­வர்­கள்; 20 விழுக்­காட்­டி­னர் கர்­நா­டக மாநிலத்­த­வர்; 15 விழுக்­காட்­டி­னர் மகா­ராஷ்­டிர மாநி­லத்­த­வர்; மூன்று விழுக்­காட்­டி­னர் வெளி­நாட்­டி­னர்.

டெல்லி, பெங்­க­ளூரு, ஹைத­ரா­பாத் ஆகிய நக­ரங்­களில் இருந்து பாலி­யல் மோச­டிக் கும்­பல் இணை­யம் வழி­யா­கச் செயல்­பட்­ட­தாக சைப­ரா­பாத் காவல்­துறை ஆணை­யர் ஸ்டீ­ஃபன் ரவீந்­திரா கூறி­னார்.

அம்­மூன்று நக­ரங்­க­ளி­லும் வாடிக்­கை­யா­ளர் அழைப்பு மையங்­களை அக்­கும்­பல் அமைத்­தி­ருந்­தது என்று வாட்ஸ்­அப் குழுக்­களே அக்­கும்­ப­லின் முக்கியமான தொடர்­புத்­ தளமாக விளங்­கி­யது என்­றும் காவல்­துறை தெரி­வித்­தது.

சொகு­சான வாழ்க்கை, எளி­தாகப் பணம் ஈட்­டு­தல், வேலை­வாய்ப்பு போன்ற ஆசை­க­ளைக் காட்டி, பெண்­களை அக்­கும்­பல் தங்­க­ளது வலை­யில் வீழ்த்­தி­யது. இணை­யத்­தளங்­க­ளி­லும் சமூக ஊட­கங்­க­ளி­லும் விளம்­ப­ரம் செய்து, பெண்­களை அது ஈர்த்­தது.

பாலி­யல் சேவைக்கு வாடிக்­கை­யா­ள­ரி­டம் வசூ­லித்த பணத்­தில் 30 விழுக்­காட்­டைப் பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளுக்­குத் தந்த அக்­கும்­பல், 35 விழுக்­காட்டை விளம்­ப­ரங்­க­ளுக்­கா­கச் செல­விட்­டது.

எஞ்­சிய 30 விழுக்­காட்டை அக்­கும்­பல் தங்­களுக்­குள் பகிர்ந்­து­கொண்­டது.

முகம்­மது அதீம், அர்­னவ், அரோரா, நிகில் எனப் பல பெயர்­களில் செயல்­பட்ட முக்­கி­யக் குற்­ற­வாளி, மும்பை, கோல்­கத்தா, டெல்லி போன்ற நக­ரங்­க­ளைச் சேர்ந்த கிட்­டத்­தட்ட 950 பெண்­களை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு அனுப்­பி­வந்­த­தா­க­வும் போதைப்­பொருளை விற்­ற­தா­க­வும் காவல்­துறை தெரி­வித்­தது.

அத்­து­டன், ரிஷி என்ற முகம்­மது அப்­துல் சல்­மா­னால் கடந்த ஆறாண்­டு­களில் ஏறக்­கு­றைய 900 பேர் பாதிக்­கப்­பட்­ட­தா­க­வும் கூறப்­பட்­டது.

மோச­டிப் பேர்­வ­ழி­க­ளி­டம் இருந்து 34 திறன்­பே­சி­கள், மூன்று கார்­கள், ஒரு மடிக்­க­ணினி, 2.5 கிராம் போதைப்­பொ­ருள் ஆகி­ய­வற்­றைக் காவல்­துறை கைப்­பற்­றி­யது.

பாலி­யல் மோச­டிக் கும்­பல்­மீது சைப­ரா­பாத், ஹைத­ரா­பாத் காவல்­துறை 39 புகார்­க­ளைப் பதி­வு­செய்­துள்­ளது. இன்­னும் பலர் தலை­மறை­வாக உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!