வாகனக் கட்டணங்கள் உயர்வு: பதிவுக் கட்டணம் 59% உயரும்

$220லிருந்து $350க்கு அதிகரிக்கிறது

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் டிசம்­பர் 19ஆம் தேதி முதல் வாக­னம் தொடர்­பான சில கட்­ட­ணங்­களை உயர்த்த உள்­ள­தால் வாக­னத்­தைச் சொந்­த­மாக்­கு­வது அதிக செல­வு­மி­குந்த ஒன்­றாக மாற உள்­ளது.

டிசம்­பர் 5ஆம் தேதி­யிட்டு வாகன வர்த்­த­கர்­க­ளுக்கு ஆணை­யம் கடி­தம் ஒன்றை அனுப்பி உள்­ளது. அது ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளின் கவ­னத்­துக்கு வந்­தது.

டிசம்­பர் 19 முதல் 25 வகை­யான கட்­ட­ணங்­களை உயர்த்த இருப்­ப­தாக அது அந்­தக் கடி­தத்­தில் குறிப்­பிட்டு உள்­ளது.

வாக­னப் பதிவு, வாகன உரி­மைச் சான்­றி­தழ் மாற்று, வாகன வகை அனு­மதி, வாகன மீட்பு அறி­விப்­பு­கள் போன்­ற­வற்­றுக்­கான கட்­ட­ணங்­கள் இதில் அடங்­கும்.

நிர்­வா­கச் செல­வு­க­ளைக் கட்­டுப்­ப­டி­யா­ன­தாக வைத்­தி­ருக்க இந்­தக் கட்­டண உயர்வு அவ­சி­யம் என்று ஆணை­யம் தெரி­வித்து உள்­ளது. ஆகக் கடை­சி­யாக 2017ஆம் ஆண்டு கட்­டண உயர்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

பெரும்­பா­லான கட்­ட­ணங்­கள் 10 விழுக்­காடு முதல் 25 விழுக்­காடு வரை அதி­க­ரிக்க உள்­ளன. அதே­நே­ரம் வாக­னப் பதி­வுக் கட்­ட­ணம் ஆக அதி­க­மாக 59 விழுக்­காடு ஏற உள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் பயன்­ப­டுத்த வாங்­கப்­படும் ஒவ்­வொரு வாக­னத்­தை­யும் பதிவு செய்­யும்­போது செலுத்­தப்­பட வேண்­டிய பதி­வுக் கட்­ட­ணம் தற்­போது $220 ஆக உள்­ளது. இது $350க்கு உய­ரு­கிறது.

பதி­வுக் கட்­ட­ணம் கடந்த ஆண்­டு­களில் அவ்­வப்­போது ஏற்­றப்­பட்டு வந்­துள்­ளது. 2000ஆம் ஆண்­டில் $140 ஆக இருந்த இக்­கட்­ட­ணம் 2017ல் $220 என்­கிற அள­வுக்­குப் படிப்­ப­டி­யான ஏற்­றம் கண்­டது. இந்த இரு கால­கட்­டத்­திற்­கும் இடைப்­பட்ட உயர்வு விகி­தம் 57 விழுக்­காடு.

ஆண்­டு­தோ­றும் 45,000 முதல் 125,000 வரை­யி­லான புதிய வாக­னங்­கள் சிங்­கப்­பூ­ரில் பதிவு செய்­யப்­ப­டு­கின்­றன. அதன் அடிப்­

ப­டை­யில் கட்­டண உயர்­வைக் கணக்­கிட்­டால், வாக­னப் பதிவு மூல­மாக மட்­டும் $5.9 மில்­லி­யன் முதல் $16.3 மில்­லி­யன் வரை ஆணை­யத்­திற்­குக் கூடு­தல் வரு­வாய் கிட்­டும்.

வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணங்­கள் புதிய உச்­சத்தை நெருங்­கும் வேளை­யி­லும் பண­வீக்­கம் 13 ஆண்டு காணாத அதி­க­ரிப்­பைக் கண்­டுள்ள நேரத்­தி­லும் வாக­னக் கட்­ட­ணங்­களை உயர்த்­தும் நட­வ­டிக்கை வாகன வர்த்­த­கர்­க­ளுக்கு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

பிரைம் என்­னும் பன்­மய வாக­னக் குழு­மத்­தின் தலை­வர் நியோ நாம் ஹெங் கூறு­கை­யில், “சிக்­கன் ரைஸ் முதல் வாக­னச் சோதனை வரை எல்­லாம் உய­ரு­கின்­றன. இது செல­வைக் கூட்­டும் என்­ப­தோடு இந்த அதி­

க­ரிப்பை சுமப்­ப­வர்­கள் வாடிக்­கை­யா­ளர்­களே,” என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!