2023ல் அதிக தனியார் வீடுகளுக்கு நிலம்

ஆக அண்­மைய அர­சாங்க நில விற்­ப­னைத் திட்­டத்­தில் தனி­யார் வீட­மைப்­புக்­கும் வர்த்­தக அலு­வ­ல­கங்­க­ளுக்­கும் ஒதுக்­கப்­படும் நில அளவு அதி­க­ரித்­துள்­ளது.

நகர மையத்­திற்கு வெளி­யில் வர்த்­த­கத் தேவை­களை ஆத­ரிக்­கும் வகை­யில் ஜூரோங் லேக் வட்­டா­ரத்­தில் 6.8 ஹெக்­டர் நிலம் விரை­வில் ஒதுக்­கப்­பட உள்­ளது.

2023ஆம் ஆண்­டின் முதல் பாதிக்­கான உறு­தி­செய்­யப்­பட்ட பட்­டி­ய­லில் காணப்­படும் தனி­யார் வீடு­க­ளின் எண்­ணிக்கை 2014 ஆம் ஆண்­டின் முதல் பாதி­யில் இருந்­த­தைக் காட்­டி­லும் அதி­க­ரித்து உள்­ளது.

இருப்­பி­னும், அண்­மையை சொத்­துச் சந்தை வேகத் தணிப்பு நட­வ­டிக்­கை­க­ளா­லும் அடுத்த ஆண்­டில் பொரு­ளி­யல் வளர்ச்சி மெது­வ­டை­யும் சாத்­தி­யம் இருப்­ப­தா­லும் தனி­யார் வீடு­க­ளின் வளர்ச்சி விகி­தம் மித­ம­டைந்து உள்­ளது.

இதற்­கி­டையே, அலு­வ­ல­கங்­

க­ளுக்­கான நில ஒதுக்கீடு 2016 ஆம் ஆண்­டுக்­குப் பிறகு பெரிய அள­வைச் சந்­தித்­துள்­ளது. தேசிய வளர்ச்சி அமைச்சு நேற்று வெளி­யிட்ட அடுத்த ஆண்­டுக்­கான பட்­டி­ய­லில் ஏழு கட்­டு­மா­னத் தளங்­கள் இடம்­பெற்று உள்­ளன.

இவற்­றில் 4,090 வீடு­க­ளைக் கட்­ட­லாம். இது, இந்த ஆண்­டின் இரண்­டாம் பாதி­யில் 3,505 வீடு­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­ட­தைக் காட்­டி­லும் 16.7 விழுக்­காடு அதி­கம்.

4,090 தனி­யார் வீடு­களில் 700 எக்சகி­யூட்­டிவ் கொண்­டோ­மி­னிய வீடு­களும் அடங்­கும். அத்­து­டன், வர்த்­த­கக் கட்­ட­டங்­க­ளுக்­காக 106,400 சதுர மீட்­டர் தரைப்­

ப­கு­தி­யும் இந்த ஏழு தளங்­களில் இடம்­பெற்று உள்­ளது.

அடுத்த ஆண்­டுக்­கான உறுதி செய்­யப்­பட்ட பட்­டி­ய­லில் காணப்­படும் நில ஒதுக்கீடு, இவ்­வாண்­டின் முதல் பாதி­யைக் காட்­டி­லும் 39.3 விழுக்­கா­டும் இரண்­டாம் பாதி­யைக் காட்­டி­லும் 25.9 விழுக்­கா­டும் அதி­கம் என்று இஆர்ஏ சொத்து நிறுவ­னத்­தின் ஆராய்ச்சி மற்­றும் ஆலோ­ச­னைப் பிரி­வுத் தலை­வர் நிக்­க­லஸ் மாக் தெரி­வித்து உள்­ளார்.

உறுதி செய்­யப்­பட்ட பட்­டி­ய­லில் காணப்­படும் ஏழு தளங்­களில் இரண்­டில் குடி­யி­ருப்­புக்­கும் வர்த்­த­கங்­க­ளுக்­கும் இடம் ஒதுக்­கப்­படும்.

ஜூரோங் லேக் வட்­டா­ரத்­தி­லும் மரினா சவுத்­தில் உள்ள மரினா கார்­டன்ஸ் கிரசெண்டி­லும் அமைந்­துள்ள தளங்­கள் அவை.

அத்­து­டன், தெம்­ப­னி­ஸில் எக்சகி­யூட்­டிவ் கொண்­டோ­மி­னிய வீடு­க­ளுக்­கான தள­மும் இடம்­பெற்­றுள்­ளது.

தெம்­ப­னிஸ் ஸ்தி­ரீட் 62ல் புதிய டெனன் எக்சகி­யூட்­டிவ் கொண்­டோ­மி­னி­யத்­தின் அருகே அமைந்­துள்ள இந்­தத் தளம் வீவக மேம்­பாட்­டா­ளர்­க­ளின் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­யும் என்று ஆரஞ்சு டீ அண்ட் டை சொத்து நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி ஸ்டீ­வன் டான் தெரி­வித்­துள்­ளார்.

எக்சகி­யூட்­டிவ் கொண்­டோ­மி­னிய வீடு­களை உள்­ள­டக்­கிய கிட்­டத்­தட்ட 65,000 தனி­யார் வீடு களுக்­கான மொத்த விநி­யோ­கத்­திற்­கான திட்­டம் வகுக்­கப்­பட்டு வரு­கிறது.

இவற்­றில் 55,100 வீடு­கள் திட்ட மிட­லுக்­கான அங்­கீ­கா­ரத்­தைப் பெறும். அதே­நே­ரம் அர­சாங்க நில விற்­ப­னைத் திட்­டத்­தில் இடம்­பெற்­றுள்ள 9,900 வீடு­களும் திட்­ட­மி­டல் அங்­கீ­கா­ரத்­தைப் பெறாத ஒட்­டு­மொத்த விற்­ப­னைத் தளங்­களும் மொத்த விநி­யோ­கத்­தில் அடங்­கும்.

மேலும், ஏறக்­கு­றைய 33,600 தனி­யார் வீடு­கள் அடுத்த ஈராண்­டு­களில் கட்டி முடிக்­கப்­படும். இந்த விகி­தம் 2021ஆம் ஆண்­டில் கட்­டப்­பட்ட 11,500 வீடு­க­ளைக் காட்­டி­லும் 192% அதி­கம்.

ஜூரோங் லேக் வட்­டா­ரம், நகர மையத்­திற்கு வெளியே சிங்­கப்­பூ­ரின் ஆகப்­பெ­ரிய வர்த்­தக வட்­டா­ர­மாக படிப்­ப­டி­யாக மேம்­ப­டுத்­தப்­பட உள்­ளது. பர­வ­லாக்­கத்­திற்­கும் வளர்ந்து வரும் வர்த்­த­கத் தேவை­க­ளுக்­கும் ஈடு­கொ­டுக்­கும் வகை­யில் இது உரு­வாக்­கப்­ப­டு­கிறது.

அத்­து­டன், நீடித்த நிலைத்­தன்­மைக்­கான முன்­மா­திரி வட்­டா­ர­மா­க­வும் அது உரு­வெ­டுக்­கும். 2045ஆம் ஆண்­டு­வாக்­கில் உரு­வா­கும் புதிய கட்­ட­டங்­களில் கரிம வெளிப்­பாடு இல்­லாத நிலையை எட்ட இது உத­வும் என்று நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் தெரி­வித்துள்­ளது.

ஜூரோங் லேக் வட்டாரத்தில் குடியிருப்பும் வர்த்தகமும் அமையும்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!