தமிழகம், புதுச்சேரியை மிரட்டும் ‘மாண்டஸ்’: கனமழை, கல்விக்கூடங்களுக்கு விடுமுறை

தமி­ழ­கத்­தில் வட­கி­ழக்­குப் பரு­வ­மழை பெய்­து­வ­ரும் நிலை­யில் வங்­கக் கட­லில் கடந்த திங்­கட்­கி­ழமை காற்­ற­ழுத்­தத் தாழ்­வு­நிலை உரு­வா­னது. பின்­னர் இது காற்­ற­ழுத்­தத் தாழ்வு மண்­ட­ல­மாக மாறிய புய­லாக உரு­வெ­டுத்­தது. ‘மாண்­டஸ்’ என்று பெய­ரி­டப்­பட்ட புயல் நேற்­றுக் காலை வலுப்­பெற்று, அசுர வேகக் காற்­று­டன் புதுச்­சே­ரி­யின் காரைக்­கால் அருகே மையம் கொண்­ட­தாக வானிலை ஆய்வு நிலை­யம் அறி­வித்­தது.

காரைக்­கா­லுக்கு கிழக்கு-தென்­கி­ழக்­கில் 560 கிலோ­மீட்­டர் தொலை­வி­லும் சென்­னைக்கு தென்­கி­ழக்கே 650 கிலோ­மீட்­டர் தூரத்­தி­லும் மாண்­டஸ் மையம் கொண்­டி­ருந்­தது. இது இன்றோ அல்­லது நாளை (டிசம்­பர் 10) காலையோ புதுச்­சேரி, ஸ்ரீஹ­ரி­கோட்டா இடையே கரை­யைக் கடக்க வாய்ப்­புள்­ள­தாக ஆய்வு நிலை­யம் முன்­னர் தெரி­வித்­தது. இருப்­பி­னும், மகா­ப­லி­பு­ரம் அருகே புயல் கரையைக் கடக்­கும் என ஆகக் கடைசி அறிக்கை கூறி­யது.

புய­லின் சீற்­றம் கார­ண­மாக தமி­ழ­கத்­தில் ஒன்­பது துறை­மு­கங்­களில் புயல் கூண்டு எச்­ச­ரிக்கை ஏற்­றப்­பட்­டுள்­ளது. எண்­ணூர், கட­லூர், நாகப்­பட்­டி­னம், புதுச்­சேரி, காரைக்­கால், பாம்­பன், தூத்­துக்­குடி உள்­ளிட்ட துறை­மு­கங்­களில் இரண்­டாம் எண் புயல் கூண்டு ஏற்ற அதி­கா­ரி­கள் ஆயத்­த­மா­யினர்.

மாண்­டஸ் புய­லின் வேகம் அதி­க­ரிப்­ப­தால், நாளை வரை கட­லுக்­குச் செல்ல வேண்­டாம் என்று மீன­வர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்டு உள்­ளது. புயல் கார­ண­மாக தமி­ழ­கம், புதுச்­சேரி, காரைக்­கால் பகு­தி­களில் நேற்று தொடங்­கிய கன­மழை நாளை வரை நீடிக்­கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்­தின் மண்­டல துணை இயக்­கு­நர் பால­சந்­தி­ரன் தெரி­வித்­தார்.

டெல்டா மாவட்­டங்­க­ளுக்கு கன­ம­ழைக்­கான ஆரஞ்சு எச்­

ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது. கட­லூர், மயி­லா­டு­துறை, நாகப்­பட்­டி­னம், திரு­வா­ரூர், தஞ்­சா­வூர், புதுக்­கோட்டை போன்ற மாவட்­டங்­களில் கன­ம­ழைக்­கான வாய்ப்பை உணர்த்­தும் எச்­ச­ரிக்கை அது. செங்­கல்­பட்டு, காஞ்­சி­பு­ரம், விழுப்­பு­ரம் உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளுக்கு அதிக கன­ம­ழைக்­கான சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

கன­மழை எச்­ச­ரிக்கை கார­ண மாக சென்னை, திரு­வள்­ளூர், காஞ்­சிபு­ரம், செங்­கல்­பட்டு, வேலூர், விழுப்­பு­ரம், கட­லூர், ராணிப்பேட்டை உள்­ளிட்ட மாவட்­டங்­களில் இன்று பள்ளி, கல்­லூ­ரி­க­ளுக்கு விடு­முறை விடப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!