பாட்டு கேட்கலாம்; சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்

மக்­கள் அணிந்­து­கொள்­ளக்­கூ­டிய தொழில்­நுட்­பக் கரு­வியை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சிங்­கப்­பூ­ரர்­கள் வாங்க முடி­யும் என்று ‘டைசன்’ நிறு­வ­னம் அறி­வித்­துள்­ளது.

அனைத்­து­லக அள­வில் வீட்­டுப் பொருள்­களை இது­வரை தயா­ரித்­து­வந்த ‘டைசன்’, அதன் பிரிட்­டிஷ், சிங்­கப்­பூர் ஆய்­வுக்­கூ­டங்­களில் உரு­வாக்­கிய இந்­தக் கரு­வி­யின் பெயர் ‘டைசன் ஸோன்’.

வெளி­யி­லி­ருந்து வரக்­கூ­டிய சத்­தத்தை நீக்­கும் தன்­மை­யு­டைய இந்­தக் காதணி கேட்­பொ­றி­யில் காற்று சுத்­தி­க­ரிப்பு அம்­ச­மும் பொருந்­தி­யுள்­ளது.

அடுத்த மாதம் சீனா­வில் இதன் விற்­பனை தொடங்கி, அமெ­ரிக்கா, பிரிட்­டன், ஹாங்­காங், சிங்­கப்­பூர் என வரி­சை­யா­கப் பல நாடு­களில் விற்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

இருப்­பி­னும், கரு­வி­யின் தோற்ற வடி­வ­மைப்பு குறித்து ஒரு சிலர் அதி­ருப்தி தெரி­வித்து வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

நான்கு சுவர்­க­ளுக்­குள் காற்று மாசு­பாட்­டைக் குறைக்­கப் பல்­வேறு கரு­வி­களை நிறு­வ­னம் உரு­வாக்கி இருந்­தா­லும் வெளிப்­பு­றங்­களில் காற்று மாசு­பாட்­டுப் பிரச்­சி­னை­யைக் கையாள்­வது தொடர்­பில் சிந்­திக்­கத் தொடங்­கி­ய­தில் ஆறு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் இக்­கரு­வியை உரு­வாக்­கும் திட்­டம் தொடங்­கி­ய­தாக நிறு­வ­னத்­தின் பொருள் புத்­தாக்­கப் பிரி­வின் துணைத் தலை­வர் திரு அலெக்ஸ் நோக்ஸ் கூறி­னார்.

மூக்­கின் அருகே சுத்­த­மான காற்­று­டைய ஒரு குமிழி தேவைப்­படு­வதை உணர்ந்த நிறு­வ­னத்­தின் பொறி­யா­ளர்­கள், உட­லில் அணிந்து­கொள்­ளக்­கூ­டிய காற்று சுத்­தி­க­ரிப்பு அம்­சத்­துக்­குக் காதணி கேட்­பொறியே பொருத்­தம் என்று முடி­வெ­டுத்­த­னர்.

கரு­வி­யின் இரு வடிப்­பான்­கள் 12 மாதம்­வரை நீடிக்­கும் என்று நிறுவனம் குறிப்­பிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!