பிரிட்டன்

கியவ்: பிரிட்டி‌‌ஷ் தற்காப்பு அமைச்சர் கிராண்ட் ‌ஷாப்ஸ், உக்ரேனியத் தலைநகர் கியவில் உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியைச் சந்தித்து, உக்ரேனின் ஆகாயத் தற்காப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி பேசியதாக அதிபர் அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
லண்டன்: அடுத்த தலைமுறையினர் புகைபிடிக்க முடியாதபடி பிரிட்டனில் வருங்காலத்தில் சிகரெட்டுக்குத் தடை விதிப்பது குறித்து அந்நாட்டுப் பிரதமர் ரிஷி சுனக் பரிசீலனை செய்து வருகிறார்.
லண்டன்: பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று, போலி ஆவணங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான விமான இயந்திர பாகங்ளை உலகளவில் விமான நிறுவனங்களுக்கு விற்றதாக ஜெனரல் இலெக்ட்ரிக் (ஜிஇ), சாஃப்ரான் ஆகிய நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
லண்டன்: இங்கிலாந்தில் ஊதிய உயர்வு கேட்டுப் போராடி வரும் மருத்துவர்கள் இவ்வாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவிருக்கின்றனர். இதுவரை இல்லாத இத்தகைய சம்பவத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் எனத் தேசிய சுகாதாரக் கட்டமைப்பின் (என்எச்எஸ்) அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
லண்டன்: பிரிட்டனில் வசதிக் குறைந்தோருக்கு அரசாங்கம் வழங்கும் உதவித் தொகை குறைக்கப்படக்கூடும். இது குறித்து அந்நாட்டுப் பிரதமர் ரிஷி சுனக் (படம்) பேசியதைத் தொடர்ந்து இந்த உணர்வு எழுந்துள்ளது.