இந்தியா

கொழும்பு: இலங்கையில் $209 மில்லியன் செலவில் கட்டப்பட்ட விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனத்திடம் ஒப்படைக்க இலங்கை அரசாங்கம் முடிவெடித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டு அமைச்சரவை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26ஆம் தேதி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்திய ராணுவக் கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையைச் சேர்ந்த விமானி மேஜர் சி. தீனேஸ்வரனுக்குச் சிறந்த அனைத்துலக மாணவ அதிகாரிக்கு வழங்கப்படும் ‘சதர்ன் ஸ்டார்’ பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இப்பதக்கத்தை வென்ற மூன்றாவது சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரி இவர் ஆவார். இந்திய ராணுவக் கல்லூரியில் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இந்தப் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.
பாட்னா: இந்தியாவில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த இளையர் பிரிவுத் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சென்னை: பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயி‌ஷா ரா‌ஷான் எனும் 19 வயது பெண் மாற்று இதயத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார்.
உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 24) நடந்த திருமணத்தில் பங்கேற்று விருந்துண்ட பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாகக் கூறப்பட்டது. உணவு நச்சு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.