மகாராஷ்டிரா

மும்பை: மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து திங்கட்கிழமை விலகியுள்ளார். அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை: மகாராஷ்டிர மாநிலம், புனே நகருக்கருகே வாக்குப்பதிவு இயந்திரம் செயல்விளக்கக் கூட்டத்திற்காக வாக்குப் பதிவு இயந்திரப் பெட்டி ஒன்று சாஸ்வத் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஓர் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தின் அகமது நகர் மாவட்டத்தில் பேருந்து ஒன்று கரும்பு ஏற்றிவந்த கனரக வாகனம், கார் ஆகிய வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
மும்பை: மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் சந்தித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
மும்பை: மக்களவைத் தேர்தல் 2024 ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மே 10 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. எனவே, அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.