பிணை

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத் துறை கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை வழங்கக்கோரி சட்ட மாணவர் ஒருவர், வழக்கறிஞர் கரண்பால் சிங் மூலம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். ‘நாங்கள் இந்திய மக்கள்’ என்ற பெயரில் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பார்சிலோனா: பாலியல் குற்றத்திற்காக நாலரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரேசில் காற்பந்து வீரர் டேனி ஆல்வெஸ் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிணையில் வெளிவந்த பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த 30 வயது பிரமாணிக் ஷமிம், வழிப்பறியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
பாட்னா: தங்களுக்குக் கல்வி போதிக்கும் ஆசிரியர்களையே மாணவர்கள் சிறைபிடித்த சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.