அபராதம்

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத் துறை கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை வழங்கக்கோரி சட்ட மாணவர் ஒருவர், வழக்கறிஞர் கரண்பால் சிங் மூலம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். ‘நாங்கள் இந்திய மக்கள்’ என்ற பெயரில் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
சண்டை போட்டதற்காகவும் திருடியதற்காகவும் பொது இடத்தில் தொல்லை விளைவித்ததற்காகவும் 30 வயது முகம்மது ஹஃபீஸ் அயூப்பிற்கு ஏப்ரல் 16ஆம் தேதியன்று ஆறு வாரச் சிறையும் $2,800 அபராதமும் விதிக்கப்பட்டன.
விசாகப்பட்டினம்: இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பன்டுக்கு ரூ.24 லட்சம் (S$38,750) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத வேலை நடைமுறைகள் காரணமாக ‘ரெட் கிரவுன்ஸ் சீனியர் லிவிங்’ என்னும் முதியோர் பராமரிப்பு இல்லத்தை நடத்தும் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
டிக்டாக் கணக்கைப் பயன்படுத்தி, உரிமமின்றி கடன்கொடுக்கும் நிறுவனம் ஒன்றின் சேவைகளை விளம்பரப்படுத்திய இந்தோனீசியப் பணிப்பெண்ணுக்கு எட்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.