குடியேறிகள்

பாரிஸ்: இங்கிலிஷ் கால்வாய் வழியாகப் படகில் ஃபிரான்சிலிருந்து பிரிட்டனுக்குச் செல்ல முயன்ற ஐந்து குடியேறிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) மாண்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லண்டன்: பிரான்சுக்குப் பள்ளி சுற்றுலா சென்ற சிறுவர்கள், மீண்டும் இங்கிலாந்திலுள்ள தங்களின் பள்ளிக்குத் திரும்பியபோது, அவர்களின் பேருந்தில் இரு அழையா விருந்தாளிகள் பதுங்கி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஆசியாவிலிருந்து கூடுதலான குடியேறிகள் ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர திட்டமிட்டுள்ளனர். 2022ல் ஆஸ்திரேலியா எல்லைக் கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்கியது.
கோலாலம்பூர்: மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலக் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் ஜனவரி 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை செரெம்பன், நிலாய், போர்ட் டிக்சன் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள 19 வளாகங்களில் சோதனை நடத்தினர்.
பனாமா சிட்டி: பனாமாவையும் கொலம்பியாவையும் இணைக்கும் கரடுமுரடான, ஆபத்தான டேரியன் பாதையைக் கடந்து செல்லும் குடியேறிகளின் எண்ணிக்கை 400,000ஐத் தாண்டியுள்ளது என்று அதிகாரத்துவ தரவு கூறுகிறது.