தண்டனை

செம்பவாங்கில் உள்ள வாடகை வீட்டில் தீ மூட்டி, அவருடைய முன்னாள் காதலருக்கு உடலில் 15 விழுக்காட்டுத் தீக்காயங்கள் ஏற்படுத்திய குற்றத்திற்காக டல்ஜீத் கோர் தரம் சாண்ட்டுக்கு ஓர் ஆண்டு, ஏழு மாதச் சிறைத் தண்டனை திங்கட்கிழமையன்று (மே 20) விதிக்கப்பட்டது.
சட்டவிரோத சூதாட்டத்திற்கு எதிராக மே 2ஆம் தேதிக்கும் மே 10ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 32 சந்தேக நபர்களைக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பெய்ஜிங்: கூரைப் பகுதியில் அபின் மலர்ச் செடிகளை வளர்த்த மாது ஒருவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தன்னைத் தெய்வம் என்று கூறிக்கொண்டு தன்னுடைய ஆதரவாளர்களிடமிருந்து $7 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வசூலித்ததாக 53 வயது வூ மே ஹோ மீது குற்றம் சாட்டப்பட்டது.
கேலாங்கில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குழுவின் தலைவராக இருந்த துணைக் காவற்படை அதிகாரி ஒருவர், அந்தப் பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோதமான பாலியல் ஊக்க மருந்துகளைத் தமது சொந்தப் பயன்பாட்டிற்காக எடுத்துக்கொண்டார்.