வீடுகள்

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, புக்கிட் தீமாவில் புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் கட்டப்பட இருக்கின்றன.
சிங்கப்பூர் அறிவியல் பூங்காவில் முதல் குடியிருப்புப் பேட்டைத் திட்டத்தின்கீழ், 300 கூட்டுரிமை வீடுகள் கட்டப்படவிருக்கின்றன.
செங்காங்கில் உள்ள ஃபெர்ன்வெல் நார்த்தில், பெரிய பரப்பளவிலான நிலத்தில் ஏறக்குறைய 10,000 புதிய வீடுகள் கட்டப்படலாம்.
செந்தோசா கோவ்வில் உள்ள ‘தி ரெசிடன்ஸ் அட் டபிள்யூ’ கூட்டுரிமை வீடுகளின் விலை 40 விழுக்காடு குறைக்கப்பட்டதை அடுத்து, ஏப்ரல் 15, 16ஆம் தேதிகளில் 65 வீடுகள் விற்கப்பட்டன.
அலெக்சாண்டிரா சாலையின் தெற்குப் பகுதியில் உள்ள கலை, வளமான வாழ்க்கை முறைக்கு அடையாளமாக விளங்கும் முன்னாள் கில்மன் ராணுவ வீரர்கள் குடியிருப்புப் பகுதியை பொது, தனியார் வீடமைப்புப் பகுதியாக மாற்ற பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.