காஷ்மீர்

சண்டிகர்: காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது. கர்னால், மணாலி உள்ளிட்ட சில இடங்களில் கொட்டிய கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஸ்ரீநகர்: பள்ளிவாசல் கட்டுவதற்கு நிதி திரட்டும் நோக்கில் ஏலம் விடப்பட்ட கோழி முட்டையை 226,350 ரூபாய்க்கு (S$3,700) ஏலம் போனதாக அவ்வழிபாட்டுத் தல நிர்வாகக் குழு தெரிவித்தது.
புதுடெல்லி:ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டம், ஒழுங்கை கட்டிக்காக்கும் பொறுப்பை ஜம்மு - காஷ்மீர் காவல்துறையிடமே விட்டுவிட மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஓட்டுநரின்றி 70 கி.மீ தூரம் சரக்கு ரயில் ஒன்று சென்றது. இந்தக் காணொளி சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
புதுடெல்லி: இந்தியாவின் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், காஷ்மீரில் கடும் பனிப்பொழிவுக்கிடையே செல்லும் ரயில் ஒன்றின் கண்கவர் காணொளியை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.