எச்சரிக்கை

மிச்சிகன்: முன்னோட்ட வாக்குபதிவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஜனநாயகக் கட்சியினர் புறக்கணிக்க வேண்டும் என மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி திரண்ட கிட்டத்தட்ட 100 பேர் கொண்ட குழு வலியுறுத்தியது.
சென்னை: குழந்தை கடத்தல் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவோர் மீது சட்டரீதியில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் உடனடியாக இதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அறிக்கை ஒன்றில் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வியாழக்கிழமை (பிப்ரவரி 15ஆம் தேதி) ‘முக்கியத் தகவலுக்கான’ சமிக்ஞை ஒலியை எழுப்பவிருக்கிறது.
புதுடெல்லி: சிந்து, கங்கை நதிகள் பாயும் சில வட்டாரங்களில், நிலத்தடி நீர் ஏற்கெனவே வற்றும் அபாய நிலையை எட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
தேக்கா நிலையத்தில் மேசையிலிருந்து கண்ணாடிக் குவளையையும் குளிர்பான டின்னையும் அப்புறப்படுத்தத் தவறிய வாடிக்கையாளர் ஒருவருக்கு தேசிய சுற்றுப்புற வாரிய அமலாக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.