பயணிகள்

மணிலா: பயண உடைமைச் சோதனை அதிகாரி ஒருவர், பயணி ஒருவரின் பணப்பையில் இருந்து 300 அமெரிக்க டாலர் (S$410) மதிப்புள்ள பணத்தைத் திருடி, அதனை வாய்க்குள் போட்டு விழுங்கியதாகக் கூறப்படும் சம்பவம் பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் நிகழ்ந்தது.
பேங்காக்: இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை, தாய்லாந்துக்கு 19 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் வந்துள்ளதாக அந்நாட்டு சுற்றுப்பயணத்துறை அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
கிழக்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பெருவிரைவு ரயிலுக்குள் (எம்ஆர்டி) வெள்ளைப் புகை சூழ்ந்தது. அதனால் அந்த ரயிலில் இருந்த பயணிகள் நகர மண்டபம் (சிட்டி ஹால்) நிலையத்தில் வெளியேற்றப்பட்டனர்.
ஹாங்காங்: கேத்தே பசிஃபிக் விமான நிறுவனம் ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகளில் அதன் ஆக மலிவான பயணச்சீட்டுகளில் சிலவற்றை விற்கத் திட்டமிடுகிறது.
கோலாலம்பூர்: சிட்னி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு கோலாலம்பூருக்குச் சென்றுகொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், புறப்பட்ட இடத்துக்கே திரும்ப நேரிட்டது.