ஏவுகணை

வாஷிங்டன்: இஸ்‌ரேல் பாய்ச்சிய ஏவுகணைகள் ஈரானைத் தாக்கியதாக, ஏப்ரல் 18ஆம் தேதி பின்னிரவில் ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஆகாயத் தாக்குதலுக்கு எதிராக சிங்கப்பூர் கண்டனம் தெரிவிப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 14) கூறியது.
கீவ்: உக்ரேனை நோக்கி ரஷ்யா மார்ச் 29ல் ஏவுகணைகளைப் பாய்ச்சியது. உக்ரேனின் இவானோ ஃபிரான்கிஃப்ஸ்க், கெமெனல்ன்ட்ஸ்கி ஆகிய மாநிலங்களிலும் டினிப்ரோ நகரிலும் வெடிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வாஷிங்டன்/ஏடன்: ஏமன் நாட்டில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் தாங்கிய இரண்டு கனரக வாகனங்களுக்கு எதிராகத் தான் தற்காப்புத் தாக்குதலை மேற்கொண்டதாக அமெரிக்க ராணுவம் மார்ச் 8ஆம் தேதியன்று தெரிவித்தது.
கியவ்: ரஷ்யா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உக்ரேன் மீது 14 ஆளில்லா வானூர்தித் (டிரோன்) தாக்குதல்களையும் சில ஏவுகணைத் தாக்குதல்களையும் மேற்கொண்டது. அவற்றில் 9 ஆளில்லா வானூர்திகளையும் 3 ஏவுகணைகளையும் தனது தற்காப்புத் தாக்குதலின் மூலம் தாக்கி அழித்து விட்டதாக உக்ரேன் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.