காற்பந்து

தியான்ஜின்: ஆசிய கண்டத்துக்கான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தகுதியாட்டத்தில் சிங்கப்பூரை 4-1 எனும் கோல் கணக்கில் வென்றது சீனா.
லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை பொறுப்பை தாம் ஏற்கவுள்ளதாக வெளியாகும் செய்திகளை இங்கிலாந்து ஆண்கள் காற்பந்து அணியின் நிர்வாகி கேரத் சவுத்கேட் மறுத்துள்ளார். இதுபோன்ற வதந்திகள் தம்மை அவமதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர்- சீனா இடையே அண்மையில் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தகுதிப் போட்டியைத் தொடர்ந்து, 1970ஆம் ஆண்டு அதே இடத்தில், அதே அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில், மிகக் கெட்டிக்காரத்தனமாக விளையாடி 1-1 என்ற சமநிலையில் தமது அணியை சாதிக்கவைத்த பெருமைமிகு தருணத்தை நினைவுகூர்ந்தார் ராமசாமி கிருஷ்ணன்.
உலகக் கிண்ணக் காற்பந்துக்கான ஆசியத் தகுதிச் சுற்றில் மார்ச் 21ஆம் தேதி (வியாழக்கிழமை) சிங்கப்பூரும் சீனாவும் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
கோலாலம்பூர்: மலேசிய ஏர்லைன்ஸ், இனி இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட்டின் அதிகாரபூர்வ வர்த்தக விமானப் பங்காளி நிறுவனமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.