பொஃப்மா

பொய்த் தகவல்கள் பரப்பப்படுவதைத் தவிர்ப்பதற்கான ‘பொஃப்மா’ எனப்படும் இணையம்வழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எதிர்க்கட்சி அரசியல்வாதி கோ மெங் செங்கிற்கும் அவரது மக்கள் சக்தி கட்சிக்கும் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இணையவழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித்திறத்திற்கும் எதிரான பொஃப்மா சட்டத்தின்கீழ், சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவானுக்குத் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரிடவுட் சாலையில் உள்ள இரண்டு வீடுகளை இரு அமைச்சர்கள் வாடகைக்கு எடுத்தது தொடர்பான சீர்திருத்த கட்சியின் தலைமைச் செயலாளர் கென்னத் ஜெயரத்னம் தெரிவித்த கருத்துகளை தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகமும் ‘பொஃப்மா’ எனப்படும் இணையவழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித் திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின் அலவலகமும் ஆராய்கின்றன.
பொய்ச் செய்திகளைத் தடுக்கும் பொஃப்மா சட்டத்தின்கீழ் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (பிஎஸ்பி) தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய்க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இணையவழி பொய்யுரைக்கும் சூழ்ச்சித்திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்படி (பொஃப்மா), எதிர்க்கட்சி அரசியல்வாதியான கென்னத் ஜெயரத்னம் நடத்தும் ‘டிஆர்எஸ்’ என்ற இணையத்தளமும் அவருடைய ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், எக்ஸ், லிங்க்ட்இன் ஆகிய சமூக ஊடக கணக்குகளும் பண ரீதியாக பயன்பெற தடுக்கப்பட்டுள்ளன.