கொரோனா

சிங்கப்பூரில் கர்ப்பிணிகளிடமிருந்து புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு கொவிட்-19 தொற்று பரவ மிகவும் குறைந்த வாய்ப்பே உள்ளது என்று அண்மைய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 636 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 2 பேரும், தமிழகத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 4,170 ஆக அதிகரித்துள்ளது என்று இந்திய சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: புதிதாகப் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது. கடந்த 11ஆம் தேதி நாட்டில் 938ஆக இருந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 1,970க்கு அதிகரித்துள்ளது எனறு இந்து தமிழ் திசை வெளியிட்ட தகவல் தெரிவித்தது.