விமானத்துறை

சியம்ரிப்: கம்போடியாவின் பிரபலமான அங்கோர் வாட் கோயிலிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் புதிய 3,600 மீ. நீள ஓடுபாதையுடன் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தின் அங்கமாக சீனாவின் 1.1 பில்லியன் டாலர் நிதியுதவியோடு அமைக்கப்பட்டுள்ள அந்த நிலையத்தை, கம்போடியப் பிரதமர் ஹுன் மனெட் அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பாராமதியில் விமானம் ஓட்டும் பயிற்சி அளிக்கும் ‘ரெட் பேர்ட்’ விமானப் பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் சனிக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் விபத்துக்குள்ளானது.
லண்டன்: பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று, போலி ஆவணங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான விமான இயந்திர பாகங்ளை உலகளவில் விமான நிறுவனங்களுக்கு விற்றதாக ஜெனரல் இலெக்ட்ரிக் (ஜிஇ), சாஃப்ரான் ஆகிய நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
சீனாவின் செங்டு நகரிலிருந்து பயணம் மேற்கொண்ட ஏர் சைனா பயணிகள் விமானம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிங்கப்பூரில் அவசரமாகத் தரையிறங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. விமானத்தின் இடது புறத்தில் இருக்கும் இயந்திரம் தீப்பிடித்துக்கொண்டதால் இந்நிலை உருவானது.
நீலகிரி: படுகர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஜெய்ஸ்ரீ விமானியாகி சாதனை படைத்துள்ளார். படுகர் இனத்தைச் சேர்ந்த முதல் பெண் விமானி என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.