எழுத்தாளர்

மர்மம், கற்பனை கலந்த உலகங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் செல்லும் வல்லமை உடையவை, புதிதாக வெளிவந்துள்ள சிங்கப்பூர் தமிழ்ச் சிறுவர் நாவல்கள். உள்ளூர் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட ‘காணாமல் போன கிழங்கு பாட்டி’, ‘டிராகனைத் தேடி,’ ‘அகிவா’ ஆகிய மூன்று தமிழ் நாவல்களையும் தேசிய கலைகள் மன்றமும் சிங்கப்பூர் புத்தக மன்றமும் கடந்தாண்டு இணைந்து வெளியிட்டன. எட்டு முதல் பன்னிரண்டு வயது வரையிலான மாணவ வாசகர்களை இம்முயற்சி மையப்படுத்தியது.
சமகால தமிழ்ப் புனைவுலகில் பரவலாக கவனம் பெற்ற மலேசிய எழுத்தாளர் ம.நவீன், நவீன சிறுகதைகளைப் புரிந்துகொள்வதற்கான உத்திகளை, சனிக்கிழமை ஜனவரி 27ஆம் தேதி காலை 10 முதல் 11.30 மணி வரை தேசிய நூலக வாரிய கட்டடத்தில் நடைபெற்ற உரையாடலில் பகிர்ந்துகொண்டார்.
தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில், ஞாயிறு ஜனவரி 7ஆம் தேதி மாலை 2 முதல் 3.30 மணி வரை ‘மானுட அறிவை நம்புதல்’ எனும் தலைப்பில் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் இணையம் வழியாக உரையாற்றினார்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களம் நிகழ்ச்சி, தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்தில் அமைந்துள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் ஞாயிறு (டிசம்பர் 7) பிற்பகல் 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
இவ்வாண்டு அல்லது சென்ற ஆண்டு இறுதியில் மறைந்த ஒன்பது தமிழ் எழுத்தாளர்களை நினைவுகூர்ந்த ‘நினைவின் தடங்கள்’ நிகழ்ச்சி, தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 9) நடைபெற்றது.