குற்றம்

ஏமாற்றியது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஏற்கெனவே ஆறு ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் வழக்கறிஞருக்கு மீண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சண்டை போட்டதற்காகவும் திருடியதற்காகவும் பொது இடத்தில் தொல்லை விளைவித்ததற்காகவும் 30 வயது முகம்மது ஹஃபீஸ் அயூப்பிற்கு ஏப்ரல் 16ஆம் தேதியன்று ஆறு வாரச் சிறையும் $2,800 அபராதமும் விதிக்கப்பட்டன.
வெவ்வேறு தருணங்களில் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வயது குறைந்த பெண்கள் இருவரைக் கர்ப்பமாக்கிய இளையர், சீர்திருத்தப் பயிற்சி மேற்கொள்ளுமாறு புதன்கிழமையன்று (ஏப்ரல் 17) உத்தரவிடப்பட்டது.
நொடித்துப்போன ஸ்வைபர் எனும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான ரேமண்ட் கோவுக்கு 100,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சமூகத் தோழமைச் சேவை முகவராகப் பாசாங்கு செய்து இச்சேவையை வழங்கும் பெண்களை ஏமாற்றிப் பணம் கொடுக்காமல் அவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆடவருக்கு ஏப்ரல் 16ஆம் தேதியன்று இரண்டு ஆண்டுகள், எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.