தேக்கா

சுற்றுப்பயணிகள் செல்ல விரும்பும் இடமாக லிட்டில் இந்தியா திகழ்கிறது என்றும் லிட்டில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு பங்காளித்துவ அமைப்புகளின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமானது என்றும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் புகழாரம் சூட்டியுள்ளார்.
தேக்கா நிலையத்தின் முதல் தளம், மூன்று மாதகால புதுப்பிப்புப் பணிகளுக்குப் பின் புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாத கால முழுமையான புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு தேக்கா நிலையத்தின் இரண்டாவது தளம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் இருக்கும் தேக்கா நிலையம் திங்கட்கிழமை ஜூலை மூன்றாம் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை மறுசீரமைப்புப் பணிகளுக்காக மூடப்படும். இதற்கு முன்னர் 2008ஆம் ஆண்டில் ஓராண்டு மறுசீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த தேக்கா நிலையம் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இம்முறை மூடப்படுகிறது.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு தேக்கா, கேலாங் சிராய் சந்தைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை தேசிய சுற்றுப்புற வாரியம் முடுக்கிவிட்டுள்ளது. ...