பிரதமர்

பன்ஸ்வாரா: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவின் வளத்தை இஸ்லாமியர்களிடம் வழங்கும் என்று பிரதமர் மோடி பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். ராஜஸ்தானில்  உள்ள பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி பேரணி சென்றார்.
இருபது ஆண்டுகளாக சிங்கப்பூர்ப் பிரதமராக இருந்துவரும் திரு லீ சியன் லூங், 2024 மே 15ஆம் தேதியன்று அப்பொறுப்பை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைக்கவுள்ளார். தம்முடைய பதவிக்காலத்தின்போது திரு லீ, இந்தியச் சமூகத்திற்குப் பேராதரவாக, பெருந்துணையாக விளங்கி வந்துள்ளது குறித்தும் அவரது நிர்வாகத் திறன், தலைமைத்துவம் குறித்தும் இளையோர் முதல் பெரியோர்வரை பலரும் தங்கள் கருத்துகளைத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.
கடந்த 16 ஆண்டுகளாக, தாம் பிரதமர் லீ சியன் லூங்குடன் கலந்துறவாடியபோதெல்லாம், அவரது கவனம் சிங்கப்பூர், சிங்கப்பூரர்கள் மீதுதான் இருந்தது எனப் புரிந்துகொண்டேன் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் (படம்) தெரிவித்துள்ளார்.
பிரதமர் லீ சியன் லூங்கின் பதவிக் காலத்தில் தங்களுக்கு ஆதரவு இருந்துள்ளதைக் காவல்துறை அதிகாரிகள் எப்போதும் உணர்ந்துள்ளனர் என்று காவ்லதுறை துணை ஆணையர் ஹாவ் குவாங் ஹுவீ கூறியுள்ளார்.
பிரதமராக திரு லாரன்ஸ் வோங் பதவி ஏற்றதும் அவரது புதிய அமைச்சரவையில் திரு லீ சியன் லூங் மூத்த அமைச்சராகப் பொறுப்பு வகிப்பார். மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் அதே பொறுப்பில் தொடர்ந்து சேவையாற்றுவார்.