கிருமித்தொற்று

சிங்கப்பூரில் டிசம்பர் 3 முதல் 9 வரையிலான வாரத்தில் 56,043 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன. அதற்கு முந்தைய வாரத்தில் பதிவான 32,035 சம்பவங்களைக் காட்டிலும் இது 75% அதிகரிப்பு என்று சுகாதார அமைச்சு டிசம்பர் 15ஆம் தேதியன்று தெரிவித்தது.
பெய்‌ஜிங்: சீனாவில் சுவாச நோய்க் கிருமிப் பரவல் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் மருத்துவமனைகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
மருந்தின் ஆற்றலை எதிர்க்கவல்ல பாக்டீரியாவுக்கு எதிராகத் தீர்வுகளைக் கண்டறிய, ஆய்வுக்குழு ஒன்றின் ஐந்தாண்டுத் திட்டத்திற்கு $10 மில்லியன் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
நோம்பென்: கம்போடியாவில் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்ட இரண்டு வயதுச் சிறுமி உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், கிருமியால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட ஓராண்டுக்குப் பின் இதயம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்கும் சாத்தியம் அதிகம் என்று ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.