ரமலான்

புத்ரஜெயா: மலேசியாவில் நோன்புப் பெருநாள் பாடல்களைளுக்குத் தென்னிந்திய தாள வாத்தியங்களைக் கொண்டு வாசித்தது ஓர் இசைக் குழு.
சென்னை: தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் சந்தைகளில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தொழுகையை வழிநடத்தி, ஐயங்களைக் களைந்து ஆலோசனை வழங்குகின்றனர் அப்துல் கஃபூர் பள்ளிவாசலைச் சேர்ந்த இந்த இளம் சமயப் போதகர்கள். இவர்கள் தங்களது சேவையைப் பற்றியும் ரமலான் குறித்த தங்களின் உணர்வுகளையும் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர். 
சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (TMAS) சார்பில் ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்வு மார்ச் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று பென்கூலன் பள்ளிவாசலின் மூன்றாம் தளத்திலுள்ள பன்னோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
சிங்கப்பூரில் நோன்புப் பெருநாளன்று காலையில் தொழுகை இடம்பெற ஏற்பாடு செய்யும் 68 பள்ளிவாசல்களில் மூன்றில் இரண்டில், ஒரு தொழுகை அமர்வுக்கு மேல் ஏற்பாடு செய்யப்படும் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 4) தெரிவித்தது.