வெப்பம்

மணிலா: தெற்கு ஆசிய நாடுகளை கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. சென்ற ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) கடுமையான வெப்ப அலை வீசியதால் அந்நாடுகளின் அதிகாரிகள் சுகாதார எச்சரிக்கைகளை விடுத்தனர்.
சென்னை: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 28) ஏழு இடங்களில் 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வழக்கத்தை விட பகலில் 3 டிகிரி முதல் 5 டிகிரி வரையிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. பகலில் கொளுத்தும் வெயிலில் அனல் காற்று வீசியதால் பெரும்பாலானவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
தாய்லாந்து அரசாங்கம், கடுமையான வெயில் குறித்த எச்சரிக்கையை ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
குவெஸோன் சிட்டி (பிலிப்பீன்ஸ்): பிலிப்பீன்சில் இம்மாதம் வரலாறு காணாத வெப்பம் பதிவாகி வருவதால் சில பள்ளிகள், வீட்டிலிருந்து கற்பிக்கும் முறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன.