நிதி திரட்டு

பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மனைவிக்காக நிதி திரட்டிவருகிறார் வெளிநாட்டு ஊழியரான எஸ். பிரதீப், 45.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட சிரமங்கள் குறைந்து, வாழ்க்கை சீராகத் தொடங்கியதை எண்ணி மகிழும் முன்பே சந்தோஷ்குமார்-பாக்யா தம்பதியருக்குப் பேரிடியாக விழுந்தது அவர்களின் ஆறு வயது மகன் ஸ்ரீராமுக்கு ஏற்பட்ட தீவிர நிமோனியா நோய்.
கோழிக்கோடு: கேரளாவைச் சேர்ந்த அப்துல்ரஹீம் 2006ஆம் ஆண்டு சவுதி அரேபியா சென்றார். அங்கு அப்துல்லா என்பவரின் வீட்டில் கார் ஓட்டுநர் வேலை கிடைத்தது. அப்துல்லாவின் மாற்றுத்திறனாளி மகனையும் பராமரிக்கும் பொறுப்பு ரஹீமிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒருநாள் சிறுவனைக் காரில் ரஹீம்அழைத்துச் சென்றபோது சிறுவனின் கழுத்தில் இணைக்கப்பட்டிருந்த செயற்கை சுவாசக்குழாய் மீது ரஹீமின் கை தவறுதலாகப் பட்டதில் மயக்கமடைந்து பின்னர் பரிதாபமாக மரணமடைந்தான்.
காஸாவில் போரால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவ புனித ரமலான் நோன்புக் காலத்தில் நன்கொடை திரட்ட சிங்கப்பூர் அறநிறுவனம் ஒன்று முயற்சிகளை மேற்கொண்டது.
சிங்கப்பூரைச் சேர்ந்த பலசமயக் குழுவான ஹியுமானிட்டி மேட்டர்ஸ் அமைப்பு, காஸாவிற்கு நிவாரண உதவி வழங்குவதற்கான புதிய நிதித் திரட்டைத் தொடங்கவிருக்கிறது.