மதுரை

சென்னை: பெங்களூரு , ஐதராபாத் நகரங்களில் இருந்து வெளியேறும் ஐடி நிறுவனங்கள் கோவை, மதுரையை நோக்கி வருவதாகவும், வரும் 23, 24 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஐடி மாநாடு நடைபெற உள்ளதாகவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
மதுரை: உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி செவ்வாய்க்கிழமை (ஜன.16) விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் 14 காளைகளை அடக்கி பிரபாகரன் என்பவர் முதல் பரிசான காரை வென்றார். பாலமேட்டில் 2020, 2022-ல் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதல் பரிசு வென்றவர் இவர்.
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை முன்னிட்டு, அனைத்து சமூகத்தினரையும் அழைத்து ஆட்சியர் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேச்சு வார்த்தையை முழுமையாகக் காணொளிப் பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
திருச்சி: தமிழகத்தின் கோரிக்கை மக்களுக்கானது அது அரசியல் முழக்கமல்ல என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரை: மதுரை மாநகரில் மோட்டார் சைக்கிள்களில் வந்து கைப்பேசி, நகை, பணப்பை போன்றவற்றைப் பறித்துக்கொண்டு செல்லுதல், இருசக்கர வாகனத் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. அதையடுத்து, மாநகரக் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.