விஜய்

சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உறுப்பினர் சேர்க்கைக்கு என தனி அணி அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்: நடிகர் விஜய் விரைவில் தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (கோட்) படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தளபதி 69 குறித்து எந்த ஓர் அறிவிப்பும் வெளிவரவில்லை.
சென்னை: நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை பிப்ரவரி 2ஆம் தேதி நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் ஆகியவை அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
சென்னை: புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், அக்கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.