சிண்டா

சிண்டா இளையர் குழு, ஊனமுற்றோருக்கான ‘செஞ்சிலுவை இல்லம்’ உடன் இணைந்து, சமூகத்தில் உள்ள ஊனமுற்ற முதியவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் முயற்சி ஒன்றை மேற்கொண்டது.  
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா), சமூகப் பங்காளிகளுடன் இணைந்து சனிக்கிழமை (மார்ச் 23), வசதி குறைந்த 600 குடும்பங்களுக்கு விழாக்கால அன்பளிப்புப் பைகளை வழங்கியது.
மண்வெட்டியால் குழி தோண்டி மரம், நடுவதற்கு தேசிய பூங்காக் கழக ஊழியர்களிடம் இளம் தொண்டூழியர்கள் கற்றுக்கொண்டனர்.
சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் இளையர் மன்றம், தேசிய பூங்காக் கழகத்துடனும் எம்டிசி அமைப்புடனும் இணைந்து சமூக மரம் நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.