தாக்குதல்

பெஷாவர்: பாகிஸ்தானில் சீனப் பொறியாளர்கள் சென்ற வாகனத்தைக் குறிவைத்து செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் அறுவர் கொல்லப்பட்டனர்.
ஷா அலாம்: காவல்துறை அதிகாரி ஒருவரை அடித்துக் கொன்றதன் சந்தேகத்தில் ஐந்து மலேசியர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இருபது ஆண்டுகளில் ரஷ்யாவில் நடந்த மிகக் கொடூரமான தாக்குதலில் ஏராளமானவர்கள் தானியங்கி ஆயுதங்களால் சுடப்பட்டதையடுத்து, ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 24) அந்நாடு துக்கம் காத்தது. தேசியக் கொடிகள் அரை கம்பத்துக்கு இறக்கப்பட்டன.

தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 133 பேர் கொல்லப்பட்டனர். 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டுபிடித்து தண்டிப்பதாக சூளுரைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தேசிய துக்க தினத்தை அறிவித்தார்.

“தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று மார்ச் 23ஆம் தேதி, மக்களுக்கு ஆற்றிய உரையில் திரு புட்டின் வருத்தம் தெரிவித்தார்.
கார்கிவ்: உக்ரேனின் எரிசக்தி உள்கட்டமைப்பின் மீது ர‌ஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களில் குறைந்தது ஐவர் மாண்டனர்.
திருவனந்தபுரம்: ஆடவர் ஒருவர் பொது இடத்தில் தன் மனைவியின் கழுத்தைக் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் மார்ச் 20ஆம் தேதியன்று நிகழ்ந்தது.