சிங்கப்பூர்

தெம்பனிசில் இருவரைப் பலிவாங்கிய வாகன விபத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார் ஓட்டுநர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பெரும்பாலான உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் எந்தவொரு அறிகுறிகளும் இன்றித் திடீரென நிகழ்கின்றன என்று 56 விழுக்காட்டிற்கும் மேலான மக்கள் கண்மூடித்தனமாக நம்புவதாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது.
பிடாடாரி நகரத்தின் பிரதான சாலையை பார்ட்லி சாலையுடன் இணைப்பதற்கான திட்டம் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் ஆளில்லா வானூர்திகளைச் (ட்ரோன்) சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதன் தொடர்பில் எட்டு பேர் மீதும் ஏழு நிறுவனங்கள் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டு, $4,000 முதல் $45,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.
தோ பாயோ வட்டாரச் சிற்றங்காடியில் 74 வயதுக் காசாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடிக்க முயன்ற ஆடவருக்கு ஏப்ரல் 23ஆம் தேதி ஈராண்டுச் சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.