ரத ஊர்வலம்

தைப்பூசத் திருவிழாவின் முந்தைய நாளான நேற்று, (ஜனவரி 24) காலை 5 மணியளவில் வெள்ளி ரதம் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலிலிருந்து புறப்பட்டு, சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சற்று நேரம் நின்று, பின்னர் கியோங் செய்க் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்தைச் சென்றடைந்தது.
இவ்வாண்டு தீமிதித் திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ மாரியம்மன் வீற்றிருக்கும் வெள்ளி ரதத்தின் இரண்டாம் நாள் ஊர்வலம் சனிக்கிழமை (நவம்பர் 4) சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலிலிருந்து மாலை 5 மணிக்குப் புறப்பட்டது.
இவ்வாண்டு தீமிதித் திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ மாரியம்மன் வீற்றிருக்கும் வெள்ளி ரதத்தின் முதல் நாள் ஊர்வலம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 3) சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டது. பின்னர் எவர்ட்டன் பார்க் பல்நோக்கு மண்டபம், ஜாலான் புக்கிட் மேரா புளோக் 141, புக்கிட் பெர்மாய் புளோக் 109, தெலுக் பிளாங்கா ரைஸ் புளோக் 29 ஆகிய இடங்களில் வெள்ளி ரதம் நின்று பக்தர்களின் காணிக்கைகளை ஏற்றுக்கொண்டு நள்ளிரவு வாக்கில் மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.
மலேசியாவின் பினாங்கில் ஆண்டு தோறும் தைப்பூசத்தன்று முருகக் கடவுளின் சிலையுடன் நடத்தப்படும் இரட்டை தேர் ஊர்வலம் அடுத்த ஆண்டு நடைபெறுமா என்பது சந்தேகமாக...