தடுப்பூசி

ஆண்டு இறுதியில் வழக்கமாக அதிகரிக்கும் கடுமையான சுவாசத் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், மக்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் முகக்கவசம் அணிந்துகொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
நோயாளிகளுக்கு போலி கொவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டதாகச் சொல்லப்படும் மருத்துவர் ஒருவர், தமக்கு இடைக்காலத் தடை விதிப்பதற்குப் பதிலாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தைப்பே: சுவாச நோய்கள் தொடர்பான சம்பவங்கள் சீனாவில் அதிகரித்துள்ள நிலையில் முதியவர்களும் இளம்பிள்ளைகளும் உடலில் அதிக எதிர்ப்புச்சக்தி இல்லாதோரும் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி தைவானின் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
நோவாவேக்ஸ் கொவிட்-19 தடுப்பூசியானது 2024ஆம் ஆண்டு முதல் தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் கிடைக்காது எனச் சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
ஆக்ரா, கானா: பெரிய அளவில் ஏற்படும் மோசமான நோய்ப்பரவல்கள் உலகம் முழுவதும் பரவிவருகின்றன. அவற்றால் பெரும்பாலும் குழந்தைகள் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.