உள்துறை அமைச்சு

குற்றக் கும்பல்கள் அல்லது ரகசியச் சங்கங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படுபவரை விசாரணையின்றித் தடுத்துவைக்கவோ காவல்துறைக் கண்காணிப்பின்கீழ் வைக்கவோ உத்தரவிடும் உள்துறை அமைச்சரின் அதிகாரத்தை நீட்டிப்பது தொடர்பான மசோதா முதல் வாசிப்பிற்காக மார்ச் 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரின் வெவ்வேறு சட்ட அமலாக்க அமைப்புகளின் அதிகாரிகள் ஒரே இடத்தில் வேலைசெய்யும் விதமாக, புதிய செயலாக்க நிலையத்தை உள்துறை அமைச்சு கட்டிவருகிறது.
சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரான ஃபிலிப் சான் மான் பிங், ஹாங்காங் சிங்கப்பூர் வர்த்தகச் சங்கத்தின் நிர்வாக குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.
சிங்கப்பூரின் புதிய வெளிநாட்டினர் தலையீட்டு சட்டப்படி, தொழிலதிபரான ஃபிலிப் சான் மான் பிங், வயது 59, என்பவர் முக்கியமான அரசியல் சார்புடைய நபராக சிங்கப்பூர் அதிகாரிகள் அவரை அறிவிக்க உள்ளதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு சிங்கப்பூரின் பல இடங்களில் திடீர் சோதனைகள் நடத்திவருகிறது.